ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆடைகள் வாடகை பிசினஸ் - கனவு இல்லத்தை வாங்கிய இளம்பெண்!

ஆடைகள் வாடகை பிசினஸ் - கனவு இல்லத்தை வாங்கிய இளம்பெண்!

கனவு இல்லத்தை வாங்கிய இளம்பெண்!

கனவு இல்லத்தை வாங்கிய இளம்பெண்!

புதுமையான பிசினஸ் ஐடியா ஒன்றை உருவாக்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் தன்னுடைய கனவு வீட்டை வாங்கியுள்ளார் இந்த செய்தி இணையம் முழுவதும் வைரலாக பரவி பகிரப்பட்டு வருகின்றது. அதற்குக் காரணம் இவரின் புதுமையான பிசினஸ் ஐடியா!

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இது என்னோட டிரீம் ஹவ்ஸ்! இப்படி எல்லாம் வீடு கட்டணும், இந்த மாதிரி வீடு வாங்கணும், என்று பலருக்கும் கனவுகள் இருக்கின்றன.எல்லாருக்குமே கனவு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக கடினமாக உழைப்பவர்கள் இருக்கின்றனர். சில நேரங்களில் கடின உழைப்பு மட்டும் போதாது, ஸ்மார்ட்டாக சிந்திக்க வேண்டும். புதுமையான பிசினஸ் ஐடியா ஒன்றை உருவாக்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் தன்னுடைய கனவு வீட்டை வாங்கியுள்ளார் இந்த செய்தி இணையம் முழுவதும் வைரலாக பரவி பகிரப்பட்டு வருகின்றது. அதற்குக் காரணம் இவரின் புதுமையான பிசினஸ் ஐடியா!

நீங்கள் ஒரு பார்ட்டிக்கோ அல்லது ஏதேனும் ஒரு விசேஷத்திற்கு, திருமணத்திற்கு செல்லும் பொழுது திரும்பத் திரும்ப ஒரே ஆடைகளை அணிந்து கொள்வதை விரும்ப மாட்டீர்கள். பலர் கூடும் இடத்தில் நீங்கள் இருக்கும் போது, ஆடை அனைவரையும் கவரும் விதம் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கும். அதற்காகவே திருமணத்திற்காக பார்ட்டிக்காக என்று ஒவ்வொரு தருணத்திற்கும் வெவ்வேறு விதமான கிராண்டான அதிக விலையுள்ள ஆடைகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பார்ன் நகரைச் சேர்ந்த பிரட்டனி என்ற இளம் பெண்ணும் உங்களைப்போல ஒருவர்தான். ஒரு முறை அணிந்த உடைகளை மறுபடி அணிய விருப்பம் இல்லாதவர். நிறைய ஆடைகள் இருக்கிறது, ஆனால் மறுபடி அணிய விருப்பம் இல்லையே, என்ன செய்வது என்பதையே ஓரு வெற்றிகரமான பிசினஸ் மாடலாக மாற்றியுள்ளார்.

ALSO READ |  திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் அதிரடி கேள்வி – மணமகனின் வேடிக்கையான பதில்

யாருமே ஒரு குறிப்பிட்ட ஒரு நாள், அல்லது தங்கள் வாழ்க்கையிலேயே ஒரு சில தருணங்களில் மட்டும் அணிய கூட ஆடைகளுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க முன்வரமாட்டார்கள். திருமணம் மட்டுமே, இதற்கு விதிவிலக்காக தற்போதும் காணப்படுகிறது. எனவே பிரிட்டனி இந்த ஐடியாவை பின்பற்றி தன்னுடைய ஆடைகளை வாடகைக்கு கொடுக்க தொடங்கினார்.

செய்தியாளர்களிடம் இதைப் பற்றி பேசிய பிரட்டனி, தன்னிடம் நிறைய ஆடைகள் இருக்கின்றன என்றும் ஆனால் நிறைய ஆடைகளை ஒரே ஒரு முறைதான் அணிந்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். எனவே அந்த ஆடைகளை பயன்படுத்தப்படாமல் அப்படியே இருப்பதால் அவற்றை வாடகைக்கு கொடுக்கத் தொடங்கியதாக தெரிவித்தார்.

ALSO READ |  இந்தியாவில் Jupiter 125 அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே Jupiter 110-ன் விலையை உயர்த்திய TVS!

கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய உடைகளை ஆன்லைன் வழியாக வாடகைக்கு வழங்கத் தொடங்கினார். 20 வயதிலேயே இந்த பிசினஸை தொடங்கிய இவர் சில ஆண்டுகளிலேயே லட்சக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்துள்ளார். ஆடைகளை வாடகைக்கு வழங்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தன்னுடைய கனவு வீட்டையும் வாங்கியுள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

பிரிட்டனி ஆடைகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்தாலும், தொடர்ந்து வணிகத்தை மேம்படுத்த, எல்லா வணிகத்திற்கும் அதை சார்ந்த குறிப்பிட்ட திறன் இருக்க வேண்டும். அவர் ஃபேஷன் சென்ஸ் நிறைந்தவர் என்பதால் மக்கள் விரும்பும் ஆடைகளை வாங்கி வாடகைக்கு கொடுக்கிறார். மேலும், இன்ஸ்டாகிராம் வழியாக மக்களின் கருத்துக்களையும் கேட்ட பிறகுதான் தேவைக்கு ஏற்றது போல ஆடைகளை வாங்குகிறார். பிரிட்டனிக்கு இன்ஸ்டாகிராம் கணக்கில் 20000 ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த வணிகத்தை 25 ஆடைகளுடன் தொடங்கிய பிரிட்டனி, தற்போது 300 ஆடைகளுக்கு மேல் வாடகைக்கு கொடுக்கிறார்.

ALSO READ |  இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுகிறேன் - பிரபல இயக்குநர் அறிவிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பில் நாளொன்றுக்கு ஒரு உடையின் வாடகையாக குறைந்தபட்சமாக ரூபாய் 1100 வசூலிக்கிறார். இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாயை சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார். புதிய ஆடைகளை வாங்கி அதை அணிந்த பிறகு, வாடகைக்கு வழங்க இணையத்தளத்தில் பதிவேற்றி விடுவதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஆடைகள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பகிர்ந்து வருகிறார்.

First published:

Tags: Australian