Home /News /international /

திருமணத்திற்கு அடிமையான 52 வயது பெண்.... 12வது கணவனை மணக்க ரெடி!

திருமணத்திற்கு அடிமையான 52 வயது பெண்.... 12வது கணவனை மணக்க ரெடி!

திருமணத்திற்கு அடிமையான 52 வயது பெண்

திருமணத்திற்கு அடிமையான 52 வயது பெண்

தனது 11 தோல்வியுற்ற திருமணங்களில் ஒரு திருமண உறவு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும், குறைந்தபட்சம் 6 வாரங்கள் வரை ஒரு திருமண வாழ்க்கை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருமண உறவு என்பது பலருக்கு வாழ்நாள் முழுவதும் உடன் வரும் உறுதிமொழியாக இருக்கிறது. நம் இந்திய கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஒரு புனிதமான விஷயம். பெரும்பாலான இந்திய மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு வாழ்க்கை துணையுடன் வாழ்வதை வெளிநாட்டு மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்கள் பல திருமணங்களை செய்து கொள்வது ஒன்றும் புதிய விஷயமல்ல.

ஒரு திருமணம் முறிந்தால் அடுத்த திருமணம் என்று போவது மேலை நாடுகளில் வெகு சகஜம் என்பதால் அதிகபட்சம் 2 அல்லது 3 திருமணங்கள் வரை ஒருவர் தன் வாழ்நாளில் செய்து கொள்வதை நம்மால் இயல்பாக ஏற்று கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு சில பழக்கங்களுக்கு அடிமையாவது போல திருமணத்திற்கு அடிமையான ஒரு சிலரை பற்றிய செய்திகள் நம்மை உண்மையில் யோசிக்க வைக்கும் சில நேரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

வாழ்க்கை துணைக்கு அடிமையாக இருக்காமல் திருமணத்திற்கு அடிமையாக இருக்கும் 52 வயதான மொனெட் டயஸ் (Monette Dias) என்ற பெண்ணை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம். இவர் இதுவரை 11 திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது 12-வது முறையாக திருமணம் செய்து கொள்ள தனக்கு தகுந்த துணையை கண்டறிந்துள்ளார்.

அமெரிக்காவின் Utah என்ற பகுதியை சேர்ந்தவர் மொனெட் டயஸ். சமீபத்தில் TLC-ன் "Addicted To Marriage" என்ற ஷோவில் இவர் பங்குபெற்றார். இவர் ஒரு இன்டீரியர் டிசைனர் ஆவார். இந்த ஷோவில் பங்கேற்ற இவர் தன்னுடைய அசாதாரண நிலைப்பாடு பற்றி மிகவும் வெளிப்படையாக பேசினார். அந்த தன்னை பற்றி பேசிய அவர் தன்னை தானே 'boy crazy' என்று குறிப்பிட்டு கொண்டார். மேலும் தனது முதல் ஈர்ப்பு ஏற்பட்டதிலிருந்து தான் அப்படி தான் இருப்பதாக கூறினார்.

ALSO READ |  மணமகனைப் போல குதிரையில் வந்து கெத்து காட்டிய மணப்பெண்!

தொடர்ந்து பேசிய அவர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக பின்பற்றும் குடும்பத்தில் வளர்ந்தேன். எனவே திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறவு என்பதை நினைத்து பார்க்க முடியாது. எனவே அதை பெற நான் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. நான் இதுவரை செய்து கொண்டுள்ள 11 திருமணங்களில் குறைந்தது 7 திருமணங்களுக்கு இதுவே முக்கிய காரணியாக இருந்தது என்று மொனெட் டயஸ் மிகவும் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

தனது பல திருமணங்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தை விளக்கிய அவர், "நான் வேகமாக காதலிக்கிறேன், எல்லாவற்றையும் சேர்த்து இதுவரை 28 முறை ப்ரப்போஸ் செய்யப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். என் திருமணம் எப்படி இருக்கும், என் கணவர் எப்படி இருப்பார் என்று எப்போதும் நான் கற்பனை செய்வேன். திருமணம் செய்து கொண்ட பிறகு குறிப்பிட்ட நபர் என்னை கவர தவறும் போது என்னுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வேறு நபரை தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ALSO READ |  ஜம்மு காஷ்மீரில் 1,300 ஆண்டுகள் பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு!

திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவருடன் வைத்து கொள்ளும் உடலுறவு தவறானது என்று சிறிய வயது முதலே தனக்கு கற்பிக்கப்பட்ட மத நம்பிக்கை காரணமாக வேறு நபரை தேடி பிடித்து திருமணம் செய்து கொள்கிறேன்" என்றார்.

தனது 11 தோல்வியுற்ற திருமணங்களில் ஒரு திருமண உறவு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும், குறைந்தபட்சம் 6 வாரங்கள் வரை ஒரு திருமண வாழ்க்கை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் வாழ்வில் பல திருமண தோல்வியை சந்தித்துள்ள போதிலும், காதலை நம்புவதாக கூறுகிறார் டயஸ். 2 முறை விவாகரத்தான 57 வயதுடைய ஜான் என்பவரை தனது 12-வது கணவராக தேர்வு செய்து திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார் மொனெட் டயஸ்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Marriage

அடுத்த செய்தி