Home /News /international /

எப்போதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன்! 

எப்போதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன்! 

10 வயது சிறுவன்

10 வயது சிறுவன்

ஆரோக்கியமற்ற உணவு முறை, தூக்கமின்மை, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது போன்ற முக்கிய காரணங்களால் பல வகையான பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது.

உலக அளவில் பல வகையான நோய்கள் உருவாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருக்க கூடியது நமது வாழ்க்கை முறை தான். ஆரோக்கியமற்ற உணவு முறை, தூக்கமின்மை, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது போன்ற முக்கிய காரணங்களால் பல வகையான பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது. இது ஒரு புறம் இருக்க சிலருக்கு மரபணு ரீதியாக நோய்கள் பாதித்து வருகிறது. இது போன்ற நோய்கள் மிகவும் அறிய வகையை சார்ந்தவையாக இருக்கிறது. மரபணு சார்ந்த நோய் பாதிப்புகள் சிறு வயதில் இருந்தே பலருக்கு வந்துவிடுகிறது. இப்படிப்பட்ட மோசமான பாதிப்பு தான் 10 வயது சிறுவன் ஒருவனுக்கும் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த டேவிட் என்கிற 10 வயது சிறுவனுக்கு எல்லா நேரம் பசியாக இருப்பது உணர்வது போன்ற நோய் பாதிப்பு வந்துள்ளது. இது போன்ற அரிய வகை நோய் பாதிப்புகள் உலக அளவில் ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த சிறுவனுக்கு வந்துள்ள நோயின் பெயர் பிராடர்-வில்லா சின்ரோம் ( Prader-Willi syndrome (PWS)) என்பதாகும். இது ஒரு அறிய வகை மரபணு சார்ந்த நோய் தாக்குதல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக நாம் உணவு எடுத்து கொண்ட பிறகு வயிறு முழுமையாக இருக்க கூடிய உணர்வு உண்டாகும். ஆனால், இந்த சிறுவனுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் அடுத்த சில நொடிகளில் மீண்டும் பசி எடுத்து விடுகிறது.

அதாவது சாதாரண மனிதர்களுக்கு நன்றாக சாப்பிட்ட பிறகு நமது வயிறானது நம் மூளைக்கு சிக்னலை அனுப்பி வயிறு நிரம்பி உள்ளதாக கூறும். ஆனால், டேவிட்டின் உடல் செயல்பாடுகள் அது போன்று இருப்பதில்லை. மாறாக அவை வேறு போன்று வேலை செய்கிறது. இந்த சிறுவன் எவ்வளவு சாப்பிட்டாலும் அவரின் வயிறானது முழுமை பெற்ற உணர்வை சிக்னலாக மூளைக்கு அனுப்பாமல் இருக்கிறது. இதனால் தான் எப்போதும் பசி உணர்வு இந்த சிறுவனுக்கு ஏற்படுகிறது. இந்த உணர்வால் எப்போதும் சாப்பிட வேண்டிய தூண்டல் உருவாகும்.

ALSO READ |  ஸ்கோச்  சிறந்த மாநில ஆட்சித் தரநிலையில் ஆந்திரா முதலிடம்

இதன் விளைவாக உடல் பருமன் போன்ற பலவித பாதிப்புகள் மிக சிறு வயதிலேயே இந்த சிறுவனுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பிராடர்-வில்லி நோயானது குரோமோசோம் எண் 15 இல் உள்ள மரபணுக்களின் குழுவில், சில காணாமல் போன மரபணுப் பொருட்களால் ஏற்படுகிறது. இந்த நோயிற்கு இதுவரை எந்த சிகிச்சை கண்டுபிடிக்க படவிலை. எனவே இதன் தற்போதைய சிகிச்சையானது இதன் அறிகுறிகள் மற்றும் இது தொடர்புடைய சிரமங்களை கையாளும் முறைகளை கொண்டுள்ளது. மேலும் சீரான உடல் எடை பின்பற்றுவதும் இதன் முக்கிய பங்காக உள்ளது.

ALSO READ | ஆஸ்திரேலிய பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்... லாட்டரி மூலம் கிடைத்த ரூ.55 லட்சம்!
 டேவிட் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க அவரது குடும்பத்தினர் எல்லாவற்றையும் செய்து வருவதால் உறுதிசெய்கின்றனர். டேவிட் சாப்பிடும் நேரம் எப்போது என்பதை அறியும் வகையில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவு அட்டவணையை அமைத்துள்ளனர். மேலும் அவர் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காக சமையலறையை கூட பூட்டி விடுகிறார்களாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Hungry

அடுத்த செய்தி