சீன பழமொழி மற்றும் திருக்குறள் இடையே உள்ள ஒற்றுமைகள்...தமிழில் விளக்கும் சீனப் பெண்..!

இரு நாட்டினரின் ஒற்றுமைக்கு இதுவே சான்று.

சீன பழமொழி மற்றும் திருக்குறள் இடையே உள்ள ஒற்றுமைகள்...தமிழில் விளக்கும் சீனப் பெண்..!
நிலானி
  • News18
  • Last Updated: October 10, 2019, 5:09 PM IST
  • Share this:
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையேயான பேச்சுவார்த்தை நாளை மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பை இந்தியா மட்டுமல்ல உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீன அதிபர் தமிழகத்திற்கு வரும் சிறப்பு குறித்தும், தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும் பலரும் பேசி வருகின்றனர்.

இதுபோன்ற ஒற்றுமைக் கூச்சல்கள் தற்போதுதான் கவனம் பெறுகிறது என்றாலும் இதை பல வருடங்களாக சீனாவில் இயங்கும் தமிழ் வானொலி நிலையம் சிறப்பாக செய்து வருகிறது. அதில் தொகுப்பாளர்களாக தமிழ் பேசும் சீனர்கள்தான் பணிபுரிகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.


அதில் நிலானி என்ற தொகுப்பாளர் சீனாவின் பழமொழியும், தமிழின் திருக்குறள் விளக்கமும் ஒன்றாக இருப்பதை வீடியோ மூலம் ஃபேஸ்புக்கில் விளக்குகிறார். அந்த நிகழ்ச்சிக்கு ’பண்டைய அறிவின் இன்றைய நலன்’ என்று பெயர் வைத்துள்ளார். அந்த வீடியோவில் திருக்குறளை பாடலாகப் பாடும் அவரின் தனித்துவம்தான் அவரின் வீடோயோவின் சிறப்பு. இந்த வீடியோவை வாரம் ஒரு வீடியோவாகப் பதிவு செய்கிறார்.

இதன் மூலம் சீன அறிஞர்கள் மற்றும் தமிழறிஞர்கள் இருவரின் சிந்தனைகளும் ஒரே மாதியாக இருப்பதை எடுத்துரைக்கிறார். இதோடு இரு நாட்டினரின் ஒற்றுமைக்கு இதுவே சான்று என சமத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.

உதாரணமாக ஒரு வீடியோவில்

”சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
 “

என்ற இந்த திருக்குறளைப் பாட்டாகப் பாடி அந்த குறள் தரும் அதே அர்த்தத்தைக் கொண்ட பழமொழியும் சீன மொழியில் பிரபலமாக உள்ளது என விளக்குகிறார். அதாவது அந்த குறளின் விளக்கம் ‘ அறம் இல்லாத நாடு செழித்து வளராது. அதேபோல் அறம் இல்லாத மனிதனும் நன்கு வாழ முடியாது. எனவே தாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அறத்தை கடைப்டிக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பும் செல்வமும் நம்மை வந்து சேரும்’ என்பதாகும்.

இதே பொருள் தரக்கூடிய ”கோவூத்தி பு சிங் , ரென் வூத்தி பு லிங் ” என்ற பழமொழியை எடுத்துரைக்கிறார். இறுதியாக இந்த திருக்குறள் என் மனதில் ஆழப் பதிந்துள்ளது. நீங்கள் இந்த சீனப் பழமொழியை நினைவில் வைத்துக்கொள்கிறீர்களா..? என்ற கேள்வியுடன் நிறைவு செய்கிறார்.மேலும் CRI Tamil என்ற பெயரில் இயங்கி வரும் சீன வானொலியின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிடும் தமிழ் ஸ்டேட்டஸுகளைப் படிக்கவே பெருங்கூட்டம் உள்ளது. சீனாவில் நடக்கும் முக்கிய நிகழ்வுச் செய்திகளை தமிழில் எழுதி அந்தப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு இந்தியாவின் முக்கியப் பண்டிகைகளையும் கவனித்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துச் சொல்வதும் அவர்களின் தனிச்சிறப்பு.

பார்க்க :

அதிக லாபம் தரும் தென்னை நார் கேக் தயாரிப்பு!

First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்