Home /News /international /

விமான நிலையமே இல்லாத ஐந்து நாடுகள் - சாலை, ரயில், நீர் வழியாக மட்டுமே பயணம்!

விமான நிலையமே இல்லாத ஐந்து நாடுகள் - சாலை, ரயில், நீர் வழியாக மட்டுமே பயணம்!

மாதிரி படம்

மாதிரி படம்

வேகம் மற்றும் தொலை தூர இணைப்புகள் காரணமாக விமான போக்குவரத்து மற்ற வகை போக்குவரத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

  • News18
  • Last Updated :
பெரும்பாலான பயணிகளுக்கு விமானப் பயணம் மிகவும் விருப்பமான போக்குவரத்து பயணம். வேகம் மற்றும் தொலை தூர இணைப்புகள் காரணமாக விமான போக்குவரத்து மற்ற வகை போக்குவரத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. விமான நிலையங்கள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடையாளங்களாக உள்ளன. ஏனெனில் விமான நிலையம் எங்கிருக்கிறதோ அந்த இடம் செல்வ செழிப்பானது என்று கூறலாம். விமான வசதி நகர்ப்புற வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. தற்போதைய காலங்களில், விமான நிலையம் இல்லாத ஒரு நாட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது.

எவ்வாறாயினும், இட நெருக்கடி மற்றும் இயற்கை சூழல் காரணமாக விமான நிலையம் இல்லாத சில நாடுகளும் உலகில் உள்ளன. அந்த வகையில் விமான நிலையங்கள் இல்லாத ஐந்து நாடுகளை பற்றி இங்கே காண்போம்.

அன்டோரா:

அன்டோரா நாடானது ஸ்பெயினுக்கும், பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் பைரனீஸ் மலைகளால் இந்நாடு முற்றிலும் சூழப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, இது மற்ற நாடுகளைப் போல சிறியதாக இல்லாவிட்டாலும், மொனாக்கோவை விட நூறு மடங்கு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. பள்ளத்தாக்குகளிலிருந்து 3000 மீட்டர் தொலைவில் பல சிகரங்கள் இருப்பதால் உயரமான இடங்களில் விமானங்களை இயக்குவது கடினம் மற்றும் ஆபத்தானது, குறிப்பாக பனி மற்றும் மூடுபனி காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இந்நாட்டு இணை அதிபரை சந்திப்பதற்கு மட்டும் சியோ டி உர்கெலுக்கு அருகிலுள்ள கட்டலோனியாவின் அன்டோரா-லா சியு விமான நிலையம் 30 கி.மீ தூரத்தில் உள்ளது.

லிச்சென்ஸ்டீன்:

லிச்சென்ஸ்டைனின் இடம் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளின் காரணமாக இந்நாட்டில் விமானநிலையம் இல்லை. சுமார் 160 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதி சில கிலோமீட்டர் நீளம் கொண்டது, அதன் முழு சுற்றளவு 75 கி.மீ வரை நீண்டுள்ளது. இந்நாட்டின் தனித்துவமான இடம் மற்றும் புவியியல் சூழல்களால், இங்கு விமான நிலையத்தை உருவாக்க முடியவில்லை. இருப்பினும், சுமார் 120 கி.மீ தூரத்தில் உள்ள சூரிச் விமான நிலையத்தை அடைய உள்ளூர்வாசிகள் பஸ் அல்லது கார்களை நம்பியுள்ளனர்.

வாட்டிக்கன்:

வாட்டிக்கன் உலகின் மிகச்சிறிய நாடு என்பது நமக்கு தெரியும். வெறும் 0.44 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வாட்டிக்கன் விமான நிலையம் இல்லாத நாடு என்று உங்களுக்கு தெரியுமா? ரோம் நகரின் நடுவில் வாட்டிக்கன் நகரம் இருந்தாலும், இதற்கு கடல் போக்குவரத்து இல்லை. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மக்கள் பொடிநடையாகத் தான் நடக்க வேண்டும். இருப்பினும், வாட்டிக்கன் கிறித்துவர்களின் மத முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா தலமாக இருந்தாலும் கூட இங்கு விமான நிலையம் இல்லை. பக்கத்து நாட்டு விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டுமெனில் நீங்கள் ரயிலில் வெறும் 30 நிமிடங்கள் பயணித்தால் ஃபியமிசினோ மற்றும் சியாம்பினோ விமான நிலையத்தை அடையலாம்.

மொனாக்கோ:

மொனாக்கோ நாடு பிரெஞ்சு கடற்கரையில் இயங்கும் ரயில்வே வழியாக உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, மொனாக்கோவின் பெரிய துறைமுகத்தின் வழியாக அந்நாடு பல பொருட்களைப் பெறுகிறது. நாட்டின் மோசமான இட நெருக்கடி மற்றும் 40,000 மக்கள்தொகையால் இங்கு ஒரு விமான நிலையம் கூட இல்லை. ஆனால் அண்டை நகரமான நைஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விமான நிலையம் இல்லாத பிரச்சினையை மொனாக்கோ தீர்த்துள்ளது.

Also read... Explainer: லோன் மூலம் கார் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா?

சான் மரினோ

உலகின் மிகப் பழமையான நாடாக கருதப்படும் சான் மரினோ வாட்டிக்கன் மற்றும் ரோம் நகருக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்நாடு முற்றிலும் இத்தாலியால் சூழப்பட்டுள்ளது. கடல் வழி பயணம் கூட இந்நாட்டிற்கு இல்லை. நாட்டின் சுற்றளவு பொறுத்தவரை வெறும் 40 கி.மீ க்கும் குறைவாகவே உள்ளதால் விமான நிலையம் அமைக்க இங்கு போதிய இடமில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் நாட்டில் உள்ள மக்கள் எளிதாக பயணிக்க மிக நெருக்கத்தில் மற்ற நாட்டு விமான நிலையங்கள் வெறும் 16 கி.மீ தூரத்தில் உள்ளது. சான் மரினோ சாலை வழியாக நாலாபுறமும் இணைக்கப்பட்டுள்ளது, போலோக்னா, புளோரன்ஸ், பீசா மற்றும் வெனிஸ் விமான நிலையங்களுக்கு சான் மரினோ, நல்ல அணுகலைக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் அருகிலேயே உள்ளன, அவை பெரும்பாலும் உள்ளூர்வாசிகளாலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளாலும் பயன்படுத்தப்படுகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Airport

அடுத்த செய்தி