“நிர்வாண செல்பிக்கு லோன்; திரும்ப கொடுக்கலனா லீக்”

பொழுதுபோக்கு, தங்குமிடம், படிப்பு, உயர் தர வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கும் ஆசைகள் ஆகியவற்றுக்காக பணம் கிடைக்காமல் திண்டாடும் இளம்பெண்களே இவர்களது டார்கெட்.

Web Desk | news18
Updated: November 30, 2018, 9:33 PM IST
“நிர்வாண செல்பிக்கு லோன்; திரும்ப கொடுக்கலனா லீக்”
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: November 30, 2018, 9:33 PM IST
தினசரி செலவுகளுக்காக சிரமப்படும் இளம்பெண்களை குறிவைத்து வலைவிரித்துள்ள சீன இ-காமர்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ‘நிர்வாண கடன் சேவை’ என்ற ஆஃபர்களை வழங்கிவரும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், ஏழையும் இல்லாமல் வசதியாகவும் இல்லாமல் இருக்கும் நடுத்தர வாழ்க்கையை வாழும் இளம்பெண்களை குறிவைத்து இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல முறைகேடாக தொடங்கப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு, தங்குமிடம், படிப்பு, உயர் தர வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கும் ஆசைகள் ஆகியவற்றுக்காக பணம் கிடைக்காமல் திண்டாடும் இளம்பெண்களே இவர்களது டார்கெட்.

“நிர்வாணமாக செல்பி எடுத்து அனுப்பினால் லோன்” இதுவே அந்த பெண்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள். அடையாள அட்டையுடன் சேர்ந்து நிர்வாணமாக செல்பி அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர்கள் நிர்வாண செல்பி கொடுத்தால் கேள்வியே கேட்காமல் இ-காமர்ஸ் நிறுவனங்கள் காசு வழங்குகின்றன. நிர்வாணமாக செல்பி எடுத்து அனுப்புவதால் அதற்கு பணம் விலை என்று பொருள் அல்ல.

அவர்களுக்கு கடனாகவே காசு வழங்கப்படுகிறது. வட்டியுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்கள் பணத்தை செலுத்தவில்லை என்றால்தான் சிக்கல் இருக்கிறது. நிர்வாண புகைப்படங்கள் கடன் வாங்கிவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பப்படும் என்று இ-காம்ர்ஸ் நிறுவனங்கள் மிரட்டத்தொடங்கும்.

இணையத்தில் லீக் செய்யப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் (Image: YouTube/TomoNews US)


காசு வசூலிக்கவே முடியாது என்று தெரிந்துவிட்டால் அந்த பெண்களிடம் மேலும் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களை கேட்டும் அழுத்தம் கொடுக்கின்றன. அதற்கும் ஒருபடி மேலே சென்று உடலுறவுக்கு வற்புறுத்தவும் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நிர்வாண கடன் சேவை’ என்று இந்த வகையான வணிகங்கள் சீனாவில் அழைக்கப்படுகின்றன.2016-ம் ஆண்டு கணக்கின்படி 10 ஜி.பி அளவுக்கு 161 இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், அவர்களின் புகைப்பட அடையாள அட்டையுடன் இ-காமர்ஸ் நிறுவனங்களால் லீக் செய்யப்பட்டுள்ளன.

முறையான அனுமதி எதுவும் இல்லாமல் குறு-சிறு நிறுவனங்கள் போல தொடங்கப்படும் மேற்கண்ட வகையிலான நிறுவனங்கள் பொதுவாக மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது, வாங்குவது போல சென்று இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து, முறையான அனுமதி இல்லாமல் தொடங்கப்படும் நிறுவனங்கள் கடன் வழங்குவதை அரசு தடை செய்துள்ளது. எனினும், அரசின் கவனத்திற்கு வராதபடி இந்த செயல்கள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் தங்களது தனிப்பட்ட புகைப்படங்கள் போனாலும் பரவாயில்லை, பணம் வேண்டும் என்று பல இளம்பெண்கள் இத்தகைய நிறுவனங்களை அணுகுவதே அதிர்ச்சி அளிக்கிறது.

கவர்ச்சி பத்திரிகையான ‘ப்ளேபாய்’ மீது பார்வையற்ற இளைஞர் விநோத வழக்கு

Also See.. வசூல் நாயகன் விஜயின் வெற்றி ரகசியம்

First published: November 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்