ஹோம் /நியூஸ் /உலகம் /

’பொருளாதார ஒத்துழைப்பு தாருங்கள்..!’- ட்ரம்ப்புக்கு தெரேசா மே அழைப்பு!

’பொருளாதார ஒத்துழைப்பு தாருங்கள்..!’- ட்ரம்ப்புக்கு தெரேசா மே அழைப்பு!

தெரேசா மே- ட்ரம்ப்

தெரேசா மே- ட்ரம்ப்

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமல்லாது கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் ட்ரம்ப் வரிவிதிப்பு முறை அமலில் உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் நட்புறவை வலுப்படுத்த ட்ரம்ப் பொருளாதார ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ட்ரம்ப்புக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக தெரேசா மே ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை கால அட்டவணைக்குள் நிறைவேற்றத் தவறியதால், பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலிலும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை ஒரு பிரதமராக வரவேற்று இருநாட்டு ஒப்பந்தங்கள் குறித்து கலந்தாலோசித்து வருகிறார் மே.

உலக வர்த்தக சந்தையில் எளிமையான வர்த்தகங்களை மேற்கொள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் உடன்பட்டு, வர்த்தக ஒப்பந்தங்களை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து வரும் பொருட்களுக்கு சில வரிகளை விதித்துள்ளார் ட்ரம்ப்.

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமல்லாது கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் ட்ரம்ப் வரிவிதிப்பு முறை அமலில் உள்ளது.

மேலும் பார்க்க: ’வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கப் போவதில்லை’- அமெரிக்காவுக்கு ஈரான் பதில்

Published by:Rahini M
First published:

Tags: Donald Trump, Theresa May