நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - தெராசா மே பதவி தப்பியது

Theresa May | எதிர்க்கட்சிகளால் நெருக்கடி வந்தாலும் 2022-ம் ஆண்டு நடைபெறும் தேர்தல் வரை பதவி விலகும் எண்ணமில்லை என தெரசா மே திட்டவட்டமாக தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: December 13, 2018, 6:43 AM IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - தெராசா மே பதவி தப்பியது
பிரதமர் தெரசா மே
Web Desk | news18
Updated: December 13, 2018, 6:43 AM IST
பிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற்று பதவியை தக்கவைத்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் வெளியேறுவதற்கு 52 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற தெரசா மே, ஐரோப்பிய யூனியனுடன் செய்துகொள்ள வேண்டிய எதிர்காலத் திட்டங்கள் குறித்த செயல் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் நடத்தினார்.

எனினும், பிரெக்ஸிட் தீர்மானத்தில் உள்ள சில அம்சங்களில் தெரசா மே கொண்டு வந்த திருத்தங்களுக்கு எதிராக சில அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். சொந்த கட்சியிலும் குறிப்பிட்ட சில எம்.பி.க்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

இதன் உச்சகட்டமாக தெரசா மே-வுக்கு எதிராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 48 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதன் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 200 வாக்குகளில் 117 வாக்குகளைப் பெற்று பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த தெரசா மே, எதிர்க்கட்சிகளால் நெருக்கடி வந்தாலும் 2022-ம் ஆண்டு நடைபெறும் தேர்தல் வரை பதவி விலகும் எண்ணமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Also See..

First published: December 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...