ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜூன் 7-ம் தேதி பதவி விலகுகிறார் தெரேசா மே!

ஜூன் 7-ம் தேதி பதவி விலகுகிறார் தெரேசா மே!

தெரேசா மே

தெரேசா மே

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமராக தெரேசா மே இனியும் நீடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் மீது பிரிட்டன் எம்.பி-க்களின் ஒப்புதலைப் பெற முடியாததால் விரக்தியில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.

நேற்று வெள்ளிக்கிழமை, லண்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டன் பிரதமர் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போத் அவர் பேசுகையில், “ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாதது இன்று மட்டுமல்ல என்றுமே என் மனதில் நீங்கா கவலையாக இருக்கும்” என உணர்ச்சி பெருகப் பேசினார்.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமராக தெரேசா மே இனியும் நீடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமாகப் பதவி விலகிய பின்னர் காபந்து பிரதமாரக மட்டுமே தெரேசா மே இருப்பார்.

மேலும், “கன்சர்வேட்டிவ் மற்றும் யூனியன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் வருகிற ஜூன் 7-ம் தேதி நான் பதவி விலகிவிடுவேன். அதன் பின்னர் அடுத்த ஒரு வாரத்திலேயே புதிய தலைவருக்கான தேர்தல் பணி தொடங்கிவிடும்” என அறிவித்துள்ளார். அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு அடுத்த சில வாரங்களில் விடை தெரிந்துவிடும்.

மேலும் பார்க்க: பிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...! ரூ.26.5 லட்சம் சம்பளமாம்

First published:

Tags: BREXIT, Theresa May