ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். எட்டு மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓய்ந்தபாடில்லை. ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முன்னணி நகரங்களை கைப்பற்றியது. இருப்பினும் உக்ரைன் சரணடையாமல் நோட்டோ நாடுகளின் உதவியுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி ரஷ்யாவுக்கு ஆச்சரியம் தந்தது.
போரில் முக்கிய நகர்வாக ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் நகரப்பகுதிகளை உக்ரைன் நாட்டு படையினர் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த புதின், ரஷ்யாவின் முன்னணி நகரங்களில் பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் என்று பாராமல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறார். மேலும், தேவைப்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று பகீர் எச்சரிக்கைகளையும் அவ்வப்போது விடுத்து வருகிறார்.
புதினின் இந்த செயல்பாடுகளை உக்ரைன் ஆதரவு நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்நிலையில், நேட்டோ நாடுகளுடன் நேரடி மோதல் ஏற்பட்டால் உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ரஷிய அதிபர் புதின் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சுரங்கத்தில் கிடைத்த 140 ஆண்டுகள் பழமையான ஜீன்ஸ் பேன்ட்.. ரூ.72 லட்சத்திற்கு ஏலம் போனது!
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் அரசு துரிதமான ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில், உக்ரைனுக்கு நேட்டோவில் உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது தற்கொலைக்கு சமம் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் நேட்டோவில் இணைவது 3ஆம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அதேவேளை, நோட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லாய்டு அஸ்டின் பதிலடி தந்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில் பிராந்திய உச்ச மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கசகஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia, Russia - Ukraine, Vladimir Putin