ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் உருவான உயிருள்ள சிலைகள்( வீடியோ)

அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள உயிருள்ள சிலைகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் உருவான உயிருள்ள சிலைகள்( வீடியோ)
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள உயிருள்ள சிலைகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • Share this:
டொனால்ட் டிரம்ப் - குடியுரிமை மற்றும் சுதந்திரத்தைப் பறித்தவர் என எழுதப்பட்ட பீடத்தில் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை மனிதர்களை சிலைகளைப் போல நிற்க வைத்து உயிருள்ள சிலைகளாக டிரம்ப் எதிர்ப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர். போஸ் கொடுப்பவர் என்ற தலைப்பில், பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் தாக்கும்போது கையில் பைபிளை வைத்துக் கொண்டு டிரம்ப் வேடிக்கை பார்ப்பது போலவும், உச்ச நீதிமன்றத்தில் காலி இடத்தை நிரப்புமாறு எழுதப்பட்ட பீடத்தில் டிரம்ப் காலி இடத்தில் சிறுநீர் கழிப்பது போலவும் உருவாக்கப்பட்ட உயிருள்ள சிலைகள் பலரது கவனத்தை கவர்ந்துள்ளன.



அமெரிக்காவின் பல இடங்களில் ட்ரம்பை எதிர்த்து இது போல உயிருள்ள சிலைகள் உருவாகி உள்ளன.




இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலாக பரவி வருகிறது.

தற்போது அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading