முகப்பு /செய்தி /உலகம் / அன்டார்டிகா முழுவதும் படரும் சிவப்புப் பனிப் படலம்... என்ன காரணம் என விவரிக்கும் அறிவியலாளர்கள்!

அன்டார்டிகா முழுவதும் படரும் சிவப்புப் பனிப் படலம்... என்ன காரணம் என விவரிக்கும் அறிவியலாளர்கள்!

சிவப்புப் பனி

சிவப்புப் பனி

திடீரென அன்டார்டிகா பகுதி முழுவதும் சிவப்புப் போர்வை போர்த்தியது போல சிவப்புப் பனி மண்டலமாகக் காட்சி அளிக்கிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அன்டார்டிகா பிரதேசத்தில் பனிப் படலங்கள் பொதுவாக முத்துப் போல வெண்மை நிறத்திலேயே படர்ந்திருக்கும்.

இதுதான் உலக வழக்கமும் கூட. ஆனால், திடீரென அன்டார்டிகா பகுதி முழுவதும் சிவப்புப் போர்வை போர்த்தியது போல சிவப்புப் பனி மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. இதற்குக் காலநிலை மாற்றம், உலகம் வெப்பமயமாதல் போன்ற வழக்கமான எதுவும் காரணமல்ல என விளக்கியுள்ளனர் அறிவியல் ஆய்வாளர்கள்.

அன்டார்டிகாவில் தற்போது கோடை காலமாம். இந்த வெப்பநிலை அதிகரிக்கும் வேளையில் பனி பிரதேசங்களில் Chlamydomonas nivalis chlamydomonas என்னும் ஒரு வகை பாசி படருமாம். பனிக்கட்டிகளில் உருகும் குளிர் நீரை ஆதாரமாகக் கொண்டு இந்த பாசி படருமாம். ஆனால், கோடை காலம் தொடங்கியுள்ளதால் அதிகரிக்கும் வெப்பத்தின் காரணமாக பாசி படருதலில் சில வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இதனாலே அன்டார்டிகாவின் வெண்பனிப் பிரதேசம் தற்போது சிவப்புப் பனி பிரதேசமாகக் காட்சி அளிக்கிறதாம். இதற்கு தர்பூசணி பனி என்ற பெயரும் உள்ளதென ஆய்வாஅர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பார்க்க: ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியுமா?- முடியும் என நிருபித்திருக்கும் புதிய உயிரினம்.!

First published:

Tags: Antarctica