’நடக்கும் இலை’ : இயற்கையின் அற்புதம் - உண்மை என்ன?

Leaf Insect

இலைப் பூச்சிகள் இனத்தில் பெண்கள் மட்டுமே உள்ளன. ஆண் பூச்சிகளே கிடையாது

  • Share this:
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் இருக்கும் பூச்சியைப் பார்த்து இலையா அல்லது பூச்சியா? என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்

சமூகவலைதளத்தில் அண்மையில் ஒரு வீடியோ வைரலானது. அதில், இலை ஒன்று நடப்பதை பார்த்து பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. இலை எப்படி நடக்கும்? என யோசிக்கும்போது, அது இலை அல்ல, பூச்சி என அறிந்து கொண்டனர். ஆம், பார்ப்பதற்கு அச்சு அசலாக இலை போலவே அந்தப் பூச்சி இருக்கும். சாதாரணமாக பார்க்கும்போது, உங்களால், அது ஒரு பூச்சி என்பதை உடனடியாக கிரகித்துக்கொள்ள முடியாது. அந்தளவுக்கு தத்ரூபமாக அந்த பூச்சி இருக்கும். அறிவியல் பெயரில் இலைப் பூச்சியின் குடும்பம் ஃபிலியம் ஜிகாண்டியம் என அழைக்கப்படுகிறது.

இந்த இலைப் பூச்சியை (leaf insect) ‘நடக்கும் இலை’ என்றும் அழைக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற் போல இப்பூச்சியால் நடக்க மட்டுமே முடியும், பறக்க முடியாது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் இலைப் பூச்சி, இலைகளைத் தின்று வளரும்போது பச்சை நிறத்துக்கு மாறிவிடும். 2.3 அங்குலமே இருக்கும் இந்த இலைப் பூச்சிகள், இலைகளுடன் சேர்ந்திருந்தால் சுலபத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. இந்தியா மற்றும் ஃபிஜி தீவுகளில் இலைப் பூச்சிகள் அதிகம் வாழ்கின்றன. பழுப்பு மற்றும் மெரூன் நிறத்திலும் இந்தப் பூச்சிகள் இருக்கின்றன. 
View this post on Instagram

 

A post shared by Science by Guff 🧬 (@science)


இலைப் பூச்சியின் வீடியோ இன்ஸ்டாகிராமில் சயின்ஸ் என்ற பக்கத்தில் பகிரப்பட்டது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்றால், இலைப் பூச்சிகள் இனத்தில் பெண்கள் மட்டுமே உள்ளன. ஆண் பூச்சிகளே கிடையாது என கூறியுள்ளனர். தொடர்ச்சியான ஆய்வில் இரண்டு இறந்த நிலையில் இருந்த ஆண் பூச்சிகளைக் கண்டுபிடித்தாலும், இனப்பெருக்கத்தில் அவற்றின் பங்கு என்ன? என்ற தகவல் தெளிவாக தெரியவில்லை.

கருவுறா முட்டைகளை பெண் பூச்சிகள் இடுவதாகவும், அவை பெண் பூச்சிகளை மட்டுமே பிரசவிப்பதாகவும் சயின்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலைப் பூச்சிகள் பகலில் அதிகம் செயல்படுவதை பார்க்க முடியாது என கூறும் ஆய்வாளர்கள், இரவு நேரத்தில் மட்டுமே சுற்றித்திரிவதாக தெரிவித்துள்ளனர். மனிதர்களின் கண்களில் பட்டால், அடையாளத்தை மறைத்துக் கொள்ளவும் செய்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண் பூச்சிகள் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் வரை வளரும் என கூறப்பட்டுள்ளது. நெட்டிசன்களின் பார்வையில், இலைப் பூச்சியை மிகப்பெரிய அதிசயம் என வருணித்துள்ளனர். இலையப் போல் எப்படி தத்ரூபமாக படைக்கப்பட்டிருக்க முடியும்? இயற்கையின் ஒவ்வொரு படைப்புகளும் வியக்க வைப்பதாக தெரிவித்துள்ளனர். நம் கண்களுக்கு தெரியாமல், கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் எத்தனை பூச்சிகள், இயற்கையின் படைப்புகள் இருக்கின்றனவோ என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ இதுவரை லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.
Published by:Arun
First published: