கோவிட், குரங்கு பி வரிசையில் நோரோ வைரஸ்: இங்கிலாந்தில் வேகமாக பரவுகிறது!

மாதிரிப் படம்

உணவுகுடலை இந்த வைரஸ் தாக்கும்.வைரஸ் தாக்கிய 12 - 48 மணி நேரத்தில் வயிற்று வலி,  வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் வலி, தலை வலி ஆகிய அறிகுறிகள் தென்படும். இவை மூன்று நாட்கள் வரை கூட இருக்கும்.

  • Share this:
    இங்கிலாந்து நாட்டில் தற்போது நோரோ வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாகவே நோய் தொற்றின் பாதிப்பில் உலகம் சிக்கி தவித்து வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி  டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகைகளாக பரவிவரும் அதேவேளையில், கருப்பு புஞ்சை, மஞ்சள் புஞ்சை ஆகியவையும் பரவி வருகிறது. இதற்கிடையே, சீனாவில் குரங்கு பி வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வகையில்  மேலும் ஒரு வைரஸும் இணைந்துள்ளது.  நோரோ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் தொற்று இங்கிலாந்தில் வேகமாக பரவிவருவதாக அந்நாட்டு பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    நோரோவைரஸ் என்பது மிகவும் தொற்று தன்மை வாய்ந்த வைரஸ் ஆகும்.  அமெரிக்காவில் ஏற்படும் அனைத்து உணவு நோய்களிலும் பாதிக்கும் மேலானதுக்கு நோரோ வைரஸ் காரணமாக கூறப்படுகிறது.   ‘ஃபுட் பாய்சனிங்’  என்றும் நோரோ வைரஸ் அறியப்படுகிறது.

    இதையும் படிங்க: இலங்கையில் வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா!


    உணவுகுடலை இந்த வைரஸ் தாக்கும்.வைரஸ் தாக்கிய 12 - 48 மணி நேரத்தில் வயிற்று வலி,  வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் வலி, தலை வலி ஆகிய அறிகுறிகள் தென்படும். இவை மூன்று நாட்கள் வரை கூட இருக்கும். அறிகுறிகள் இல்லாமல் கூட இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: பெட்ரோல்-டீசல் விலை குறையப் போகிறது: உற்பத்தியை அதிகரிக்க 'எண்ணெய்’ நாடுகள் சம்மதம்!


    நோரோவைரஸ் வைரஸில் பாதிக்கப்பட்டவர்களின் மலம் மற்றும் வாந்தியில் காணப்படுகிறது. சுத்தமில்லாத உணவு,  தண்ணீர்,  சுத்தமில்லாத சுற்றுப்புறம் ஆகியவற்றில் இருந்து இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுகிறது.  இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான  வைரஸ் துகள்களை வெளியிடுகின்றனர்.  இதில், சிறிதளவு இருந்தாலே ஒருவர் இந்த தொற்றால் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு  மையம் கூறுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!


    வைரஸ் இருக்கும் உணவு,  பகுதிகளை விரல்களால் தொட்டுவிட்டு, அந்த விரலை  வாயில் வைக்கும்போது ஒருவர் தொற்றுக்கு உள்ளாகக் கூடும். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் உணவு, பாத்திரங்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும்போது இந்த தொற்றுக்கு ஒருவர் உள்ளாக்கூடும். இதேபோல், தூய்மையில்லாத  தண்ணீரை பருகும்போது நோரோ வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படும்.

    பெரும்பாலும் எந்தவித சிகிச்சையும் இல்லாமலேயே ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடையக்கூடும். ஆனால் வயதானவர்கள், சிறு குழந்தைகள்  உள்ளிட்டோர் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும், எனவே மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கலாம்.
    Published by:Murugesh M
    First published: