சான்றிதழ் குளறுபடி: ஆஸ்திரேலிய எமிகிரேஷனில் சிக்கிய தமிழக மாணவர்கள்

news18
Updated: August 9, 2018, 12:58 PM IST
சான்றிதழ் குளறுபடி: ஆஸ்திரேலிய எமிகிரேஷனில் சிக்கிய தமிழக மாணவர்கள்
கோப்புப் படம்
news18
Updated: August 9, 2018, 12:58 PM IST
ஆஸ்திரேலியாவிற்கு சென்ற தமிழக மாணவர்கள் 22 பேர் போலி சான்றிதழ் சமர்ப்பித்ததாக அவர்களது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் சிலர் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டும், சிலர் படித்துக்கொண்டும் உள்ளனர். இதில் 22 பேர் ஆஸ்திரேலிய அரசிடம் போலி சான்றிதழ் வழங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக அவர்கள் 22 பேரின் விசாவும் ரத்து செய்யப்பட்டது. விசா ரத்தானது தெரிந்த மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் 22 பேரும் உடனடியாக ஊர் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் 22 பேரும் கோவை மாவட்டத்தில் உள்ள 3 தனியார் ஏஜென்சிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் ஆவார்கள்.

மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழை அவர்களிடம் கொடுத்துள்ளதாகவும், அவர்கள் தான் தேசிய அங்கீகார வாரியத்தில் போலியான சான்றிதழ்களை வழங்கி தங்களை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டினர். இந்நிலையில் தற்போது அவர்களை இந்திய தூதரகம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.

மேலும், மாணவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கிய ஏஜென்சிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: August 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...