• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • புற்று நோய் அபாயம்: இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நெஞ்சு எரிச்சல் மாத்திரைக்கு அமெரிக்காவில் தடை!

புற்று நோய் அபாயம்: இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நெஞ்சு எரிச்சல் மாத்திரைக்கு அமெரிக்காவில் தடை!

கருத்தடை மாத்திரைகள் : கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலும் எண்ணெய் சருமத்தில் அதிகம் சுரக்கும்.

கருத்தடை மாத்திரைகள் : கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலும் எண்ணெய் சருமத்தில் அதிகம் சுரக்கும்.

  • Share this:
புற்று நோய் அபாயம் காரணமாக இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நெஞ்சு எரிச்சல் மாத்திரைக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் காரணமாக, நெஞ்சு எரிச்சல், வயிற்று புண்ணுக்கு பரவலாக பயன்படுத்தப்படும் ரேனிடிடின் (Zantac) மாத்திரையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து மேலாண்மை முகமை (FDA) தடை செய்துள்ளது. இந்த மாத்திரை பரவலாக இந்தியாவில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜண்டாக் என அழைக்கப்படும் ரேனிடிடின் மாத்திரையை சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ், கிளாக்சோஸ்மித்கிளைன் உள்ளிட்ட மருந்து நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதன் சந்தை மதிப்பு ரூ.700 கோடியாகும் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த மாத்திரை ரூ. 1 மட்டுமே விலை கொண்டது. மருத்துவர் பரிந்துரை இல்லாமலே இதனை உட்கொள்ளும் பழக்கம் மக்களிடம் உள்ளது.

மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளால் வயிற்றுப் புண் ஏற்படாமல் தடுக்க இதனை இணைத்து பரிந்துரை செய்வது வழக்கம். இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ஆய்வில் ரேனிடிடின் மாத்திரையில் புற்று நோய் ஏற்படுத்தக்கூடிய வேதிப் பொருள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அமெரிக்க உணவு மற்றும் மருந்து மேலாண்மை முகமை (FDA) ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ரேனிடிடின் மாத்திரையானது பல நாட்கள் இருப்பு வைக்கும்போது அதில் உள்ள என்-நைட்ரோசோடியம் மிதைல் அளவு அதிகரிப்பது தெரியவந்தது. அடிக்கடி தொடர்ந்து இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் உருவாகும் என்பதும் உறுதியானது. இதனை ஒட்டி மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி இந்திய மருத்துக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் பல விதமான நோய்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்துவதால் பரிந்துரை இல்லாமல் விற்க கூடாது என்பதை குறிப்பிட்டு, எச்சரித்தனர். மாநில மருந்து கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு கண்கானிப்பதற்கான உத்தரவையும் பிறப்பித்தனர்.

நெஞ்சு எரிச்சலுக்காக ஓமிபரசோல், பேண்டா பரசோல் ஆகிய பிற மருந்துகளும் கடைகளில் கிடைக்கின்றன. ரேனிடிடின் மாத்திரை விற்பனைக்கு இந்தியாவில் தடை இல்லை. இருந்தாலும் அமெரிக்க ஆய்வு முடிவை அறிந்த மருத்துவர்கள் அத்தியாவிசயம் கருதி மட்டும் பரிந்துறைப்பதாக தெரிவிக்கிறார்கள். பரிந்துரை இல்லாமல் அடிக்கடி இந்த மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: