ஹோம் /நியூஸ் /உலகம் /

உலகநாடுகள் ஈரான் பெட்ரோலை இறக்குமதி செய்ய தடை; இந்தியாவுக்கு விலக்கு!

உலகநாடுகள் ஈரான் பெட்ரோலை இறக்குமதி செய்ய தடை; இந்தியாவுக்கு விலக்கு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, துருக்கி, இத்தாலி, கிரீஸ், தைவான் ஆகிய 8 நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் அமலுக்கு வந்துள்ளன. ஈரானிலிருந்து பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.

  ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து 2015-ம் ஆண்டு அணு ஆயுத தடை ஒப்பந்தம் மேற்கொண்டன. அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்ற ஈரானின் உறுதிமொழியுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்ததால், அந்நாடு மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றப் பிறகு, அணுஆயுதங்களை ஈரான் தயாரிப்பதாகக் கூறி, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். ஈரானிலிருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்தத் தடை நேற்று அமலுக்கு வந்துள்ளது. மேலும், ஈரானுக்கு கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இதன்படி, ஈரானைச் சேர்ந்தவர்கள், நிறுவனங்கள், விமானங்கள் என 700-க்கும் மேற்பட்டோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதில், ஈரானைச் சேர்ந்த 50 வங்கிகள், 200-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், கப்பல்கள், விமான நிறுவனங்கள், 65-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைகளை அறிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்தத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மதிப்பளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மனிதநேய உதவிகள் உள்ளிட்ட சில பரிமாற்றங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும் மைக் பாம்பியோ கூறினார்.

  ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, துருக்கி, இத்தாலி, கிரீஸ், தைவான் ஆகிய 8 நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மைக் பாம்பியோ கூறினார். கடந்த 6 மாதங்களில் ஈரானிலிருந்து இறக்குமதியை இந்த நாடுகள் குறைத்துள்ளதாகவும், இதன் காரணமாக, 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

  இந்த தடையில் இருந்து சீனா, கிரீஸ், இந்தியா, இத்தாலி, துருக்கி, தென்கொரியா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு விலக்கு அளிக்கிறது. இந்த நாடுகளில் பெரும்பாலனவை கடந்த ஆறு மாதங்களாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைத்துள்ளன. அதில் இரண்டு நாடுகள் எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்தியுள்ளன.

  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது, அதற்கான தொகையை வெளிநாட்டு வங்கிக் கணக்கிலேயே செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகையை மனிதநேய செயல்பாடுகளுக்கு மட்டுமே ஈரான் பயன்படுத்த வேண்டும் என்றும் மைக் பாம்பியோ நிபந்தனை விதித்தார். தங்களது நடவடிக்கைகளால், ஈரானின் நிலைப்பாட்டில் உறுதியான மாற்றம் ஏற்பட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இல்லாவிட்டால், பொருளாதாரம் சீரழியும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், அமெரிக்காவின் தடைகளை தகர்த்தெறிவோம் என்று ஈரான் அதிபர் ஹாசன் ரவானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Donald Trump, Iran, United States of America