ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்: மீண்டும் வரியை உயர்த்தப் போவதாக டிரம்ப் தகவல்

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்: மீண்டும் வரியை உயர்த்தப் போவதாக டிரம்ப் தகவல்

ட்ரம்ப்

ட்ரம்ப்

வெள்ளிக்கிழமை முதல் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி 10-ல் இருந்து 25 சதவிதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போரின் அடுத்த கட்டமாக, மீண்டும் சீன பொருட்கள் மீது வரி விதிக்க போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சீனா இடையேயான கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய வர்த்தக போர் அடுத்தடுத்த கட்டத்தை எட்டி வருகிறது. சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரில், இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

டிசம்பர் மாதம் நடந்த பேச்சுவார்த்தையில், இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை சாதகமாக இல்லை என்பதை காட்டும் விதமாக, வரும் வெள்ளிக்கிழமை முதல் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி 10-ல் இருந்து 25 சதவிதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஏறக்குறையை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5,000 பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். இதன் மூலம் அமெரிக்காவிற்கு கூடுதலாக 14,000 கோடி ரூபாய் இறக்குமதி வரியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைபெற்று வரும் வர்த்தக போரின் அடுத்த கட்டமாக, கடந்த, ஜனவரி மாதமே மீண்டும் வரியை உயர்த்த போவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் அமெரிக்கா- சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையால் வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதுவரை இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படாததால், ட்ரம்ப் மீண்டும் வரி உயர்வை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விரைவில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see... அணு ஆயுத ஒழிப்பு... டிரம்ப்-கிம் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை

Also see... 


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: China, Donald Trump, India, Trade ware, US