ஆம்னெஸ்டி மனித உரிமை அமைப்பு மூடல் சர்ச்சை: இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுரை..

(Reuters/Image for representation)

இதுதொடர்பாக அமெரிக்கா உச்சபட்ச முக்கியத்துவம் கொடுத்து, கூர்ந்து கவனித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவில் ஆம்னெஸ்டி மனித உரிமைகள் அமைப்பு மூடப்பட்ட விவகாரத்தில், சுமூகத் தீர்வு எட்டப்பட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்னெஸ்டி மனித உரிமைகள் அமைப்பு, இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்தது.

  இந்த அமைப்பினர் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த 2018-ல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

  Also read... ’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..  அதனைதொடர்ந்து ஆம்னெஸ்டி அமைப்பின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் அண்மையில் முடக்கப்பட்டன. இதனையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொள்வதாக ஆம்னெஸ்டி அறிவித்திருந்தது.

  இந்நிலையில், இதுதொடர்பாக அமெரிக்கா உச்சபட்ச முக்கியத்துவம் கொடுத்து, கூர்ந்து கவனித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: