• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா தாக்காமல் இருக்க இங்கிலாந்தில் புதிய வழிகாட்டுமுறைகள்...!

கொரோனா தாக்காமல் இருக்க இங்கிலாந்தில் புதிய வழிகாட்டுமுறைகள்...!

வீடுகளில் காற்றோட்டம் இருக்கும்படி ஜன்னல்களை திறந்து வைக்குமாறும் புதிய வழிகாட்டுமுறையில் கூறப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா வைரஸ் தாக்காமல் தவிர்ப்பதற்கு புதிய வழிகாட்டு முறைகளை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.

    அதன்படி அவரவர் குடும்பத்தினரைத் தவிர மற்றவரை நேருக்கு நேர் பார்த்துப் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அடிக்கடி கை கழுவ வேண்டும் என்று முன்னர் கூறப்பட்ட நிலையில் தற்போது துணிகளை துவைத்துப் பயன்படுத்துமாறும், வீடுகளில் காற்றோட்டம் இருக்கும்படி ஜன்னல்களை திறந்து வைக்குமாறும் புதிய வழிகாட்டுமுறையில் கூறப்பட்டுள்ளது.

    வெளியில் செல்லும்போது பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் கூடுமானவரை நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: