• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தேர்தல் வெற்றிக்காக மாகாண அமைச்சரை மிரட்டிய டிரம்ப் - தொலைபேசி உரையாடலால் சர்ச்சை!

தேர்தல் வெற்றிக்காக மாகாண அமைச்சரை மிரட்டிய டிரம்ப் - தொலைபேசி உரையாடலால் சர்ச்சை!

டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

தேர்தல் முடிவை மாற்றி அமைக்குமாறு, மாநில அமைச்சரை டிரம்ப் மிரட்டிய சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், இது அதிகார விதிமீறல் என்றும், தோல்வியை ஒப்புக்கொள்ளாத விரக்தியின் குரல் என்றும் விமர்சித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமெரிக்க அதிபர் தேர்தலில், தமது வெற்றிக்கு தேவையான வாக்குகளை கண்டுபிடித்து தரவேண்டும் என, ஜார்ஜியா மாகாண அமைச்சரை அதிபர் டிரம்ப் மிரட்டிய உரையாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன், 306 இடங்களில் வென்று, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்பை வீழ்த்தி, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தமது வாக்குகளை முறையாக எண்ணவில்லை எனவும் அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தொலைபேசியில் சனிக்கிழமை அன்று டிரம்ப் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    அதில், குடியரசுக் கட்சியின் ஜார்ஜியா மாகாண அமைச்சர் பிராட் RAFFENSPERGER-இடம் பேசும் டிரம்ப், ஜோ பைடன் வெற்றியை தகர்த்தெறிய, எப்படியாவது தமக்கு 11,780 வாக்குகளை கண்டுபிடித்து தரவேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

    Also read... ஆன்லைன் வர்த்தக அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜேக் மா எங்கே? 2 மாதங்களாக வெளி உலகில் தலைகாட்டாமல் மாயம்

    மேலும், தமது அணிக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் முறையாக எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கவேண்டும் எனவும் அந்த உரையாடலில் வலியுறுத்தி இருக்கிறார்.

    தேர்தல் முடிவை மாற்றி அமைக்குமாறு, மாநில அமைச்சரை டிரம்ப் மிரட்டிய சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், இது அதிகார விதிமீறல் என்றும், தோல்வியை ஒப்புக்கொள்ளாத விரக்தியின் குரல் என்றும் விமர்சித்துள்ளார். இந்தநிலையில் வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ள, புதிய அதிபர் பதவியேற்பு விழா பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நான்சி பெலோசி கடும் போட்டிக்கு இடையே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக 216 வாக்குகளும், எதிராக 209 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. கொரோனாவில் இருந்து அமெரிக்காவை மீட்பதே நாடாளுமன்றத்தின் முதல் நோக்கம் என நான்சி பெலோசி குறிப்பிட்டார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: