ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்கா -சீனா: தீவிரமடைந்தது வர்த்தகப் போர்

அமெரிக்கா -சீனா: தீவிரமடைந்தது வர்த்தகப் போர்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ₹4,50,000 கோடி மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது.

வர்த்தக விதிகளை மீறி சீனா செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. எனவே சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 14,60,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை முதல் 5000 வகையான பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இது ஜனவரி 1-ம் தேதி முதல் 25 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும் வரியை அறிவித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காஃபி, தேன், தொழில் துறை ரசாயனங்கள் என 5,207 வகையான பொருட்களுக்கு 10 சதவீதம், 5 சதவீதம் என்ற வகையில் வரிவிதிக்கப்படும் என்று சீன நிதியமைச்சகம் நேற்றிரவு அறிவித்தது. இதன்மூலம், 4,50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராகவே இந்த வரி விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு விசுவாசமாக உள்ள விவசாயிகள், தொழில் துறை பணியாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த சீனா முயற்சி மேற்கொள்வதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பொருளாதார ரீதியில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவிதித்து பதிலடி நடவடிக்கையை சீனா தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா-சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது.

First published:

Tags: China, Trade war intensified, Trump, USA, USA vs CHINA