பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் நாளைக்குள் ஆஜராக நீதிமன்றம் கெடு

news18
Updated: June 13, 2018, 4:35 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் நாளைக்குள் ஆஜராக நீதிமன்றம் கெடு
பெர்வெஸ் முஷாரஃப்
news18
Updated: June 13, 2018, 4:35 PM IST
பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான்  முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் நாளைக்குள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என  அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை பாகிஸ்தானின் அதிபராக இருந்தவர் முஷாரஃப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அப்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்ளிட்ட 100 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து சிறை வைத்தார். பின்னர் இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் தேசத்துரோக குற்றம் உறுதி செய்யப்பட்டது. மேலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கொலை வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டார்.

இதையடுத்து இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது அவர் ஆஜராக தவறியதால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டையை முடக்கவும் உத்தரவு போடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றம் தன்னை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த நடவடிக்கைக்கு எதிராக முஷாரஃப் ம்னுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நாளை பிற்பகல் 2 மணிக்குள் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் வரும் முஷாரஃபிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் நாளை ஆஜராக தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...