இலங்கை அரசு ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கை தயாரிக்கும் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்தக்குழுவின் தலைவராக புத்த மதத் துறவி ஞானசேரா சாரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே தனது தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் அவர், 2019 ஆம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதற்கான, சட்டத்திறகான வரைவு தயாரிக்க 13 பேர் கொண்ட குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. இந்தக்குழுவின் தலைவராக புத்த மதத் துறவி ஞானசேரா சாரர் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிராக, கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் ஞானசேரா சாரர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 13 பேர் கொண்ட அந்த குழுவில் முஸ்லீம்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். எனினும், இந்த குழுவில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை.
Must Read : முல்லைப்பெரியாறு அணை விவகாரம் : தமிழக, கேரள முதலமைச்சர்கள் நேரில் ஆலோசிக்க திட்டம்
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக இந்த, ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று வரைவு குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.