ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தால் தொடரும் போராட்டங்கள்: பெல்ஜியத்தில் 2-ம் லியோபோல்ட் மன்னரின் சிலை அகற்றம்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தால் தொடரும் போராட்டங்கள்: பெல்ஜியத்தில் 2-ம் லியோபோல்ட் மன்னரின் சிலை அகற்றம்

லியோபோல்ட் மன்னரின் சிலை

லியோபோல்ட் மன்னரின் சிலை

பெல்ஜியத்தில் காலனி ஆதிக்கத்தின் குறியீடாகக் கருதப்படும் இரண்டாம் லியோபோல்ட் மன்னரின் சிலை அகற்றப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெல்ஜியத்தில் கெண்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாம் லியோபோல்ட் மன்னரின்  சிலையை அகற்றக்கோரி ஏற்கனவே பலமுறை நடைபெற்ற போராட்டங்கள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் அமெரிக்காவில் நிகழ்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் காலனி ஆதிக்கவாதிகளின் சிலைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த மன்னர் இரண்டாம் லியோபோல்ட் சிலையும் அகற்றப்பட்டது.

மேலும் படிக்க...

வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள்

ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ரஜினியின் ஆவேச வார்த்தை

சிலையை அகற்றுவது பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வராது என்றாலும் இனவாதம், பாகுபாடு ஆகியவற்றின் அடையாளமாக இருந்த ஒருவரை கௌரவிப்பது முடிவுக்கு வருகிறது என கெண்ட் நகர மேயர் மத்தியாஸ் டெக்லெர்க் (Mathias DeClercq) கூறினார்.

First published:

Tags: Racism