பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்குகளை பின்தொடர்வதை நிறுத்தியது ஏன் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வருவதற்கு ஒருவாரம் முன்பு, குடியரசுத்தலைவர், பிரதமர் மோடியின் தனிப்பட்ட மற்றும் அலுவலக டிவிட்டர் கணக்குகளை வெள்ளை மாளிகை பின்தொடரத் தொடங்கியது.
இந்த டிவிட்டர் கணக்குகளை பின்தொடர்வதை வெள்ளை மாளிகை தற்போது, நிறுத்தியுள்ளது. பொதுவாக வெள்ளை மாளிகை, அமெரிக்க அரசின் டிவிட்டர் கணக்குகளை மட்டுமே பின்தொடர்வது வழக்கம் என்றும், டிரம்பின் இந்திய வருகையை முன்னிட்டு, அந்த பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகளை பின்தொடர்ந்தாகவும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.