• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த புதின் - அமெரிக்க எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு

டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த புதின் - அமெரிக்க எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின்

அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து நிலவும் உள்நாட்டு நெருக்கடிகளுக்கு ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் ஒரு சான்று என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

  • Share this:
    தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த புதின், வெளிப்படையாகவும், ஜனநாயகரீதியாகவும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதாகவும், அவரால் தோற்கடிக்கப்பட்ட கட்சியினர் டிரம்பின் வெற்றியை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் போலியான கதைகளை புனைந்ததாகவும் தெரிவித்தார்.

    மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து ரஷ்யா மீண்டு வருவதாகவும், துண்டு துண்டான நிர்வாக அமைப்பைக் கொண்டிருப்பதால் அமெரிக்கா போராடி வருவதாகவும் புதின் கூறியுள்ளார்.

    Also read... அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை - தலைமை காவல் அதிகாரி ராஜினாமா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: