• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சமடைய வேண்டாம் : தாலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சமடைய வேண்டாம் : தாலிபான்கள் அறிவிப்பு

தாலிபான்கள்

தாலிபான்கள்

அதிபர் பதவியிலிருந்து விலகிய அஷ்ரப் கனி, ஆஃப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்றார்.

  • Share this:
    ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், தாலிபான் படைகள் காபூல் நகருக்குள் நுழைந்துள்ளன. அத்துடன், ஆப்கன் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

    ஆஃப்கானிஸ்தானில் முக்கிய மாகாணங்கள் பலவற்றை கைப்பற்றிய தாலிபான் படையினர் ஞாயிற்றுக்கிழமையன்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்தனர். ராணுவ தாக்குதல் மூலம் காபூலுக்குள் நுழைய விரும்பவில்லை என்று தெரிவித்த தாலிபான் அமைப்பினர், நகருக்கு வெளியிலேயே காத்திருந்தனர்.

    Also Read:  ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை

    இந்நிலையில் அதிபர் அஷ்ரப் கனியுடன் தாலிபான் அமைப்பின் பிரதிநிதிகள் அதிபர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகி விட்டதாகவும், அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறும் வகையில் இடைக்கால அதிபராக, முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இடைக்கால அரசு என்னும் யோசனையை தாலிபான்கள் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

    Also Read: ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றுகிறது தாலிபான்- அதிகாரத்தைக் கொடுக்கத் தயாரான அரசு

    இந்நிலையில் அதிபர் பதவியிலிருந்து விலகிய அஷ்ரப் கனி, ஆஃப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்றார். அவர் தஜிகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், காபூல் நகருக்குள் தாலிபான் படை நுழைந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதிபர், அமைச்சர்கள், அதிகாரிகள் என மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியவர்கள் வெளியேறியதால் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் நிகழலாம் என தெரிவித்துள்ள தாலிபான்கள், தேவையான பகுதிகளில் தங்கள் படை நுழைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். அத்துடன், இனி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என அழைக்கப்படும் எனவும் தாலிபான்கள் கூறியுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: