ஹோம் /நியூஸ் /உலகம் /

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசு சின்னம் வெளியீடு - எங்கெல்லாம் உபயோகிக்கப்படும்?

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசு சின்னம் வெளியீடு - எங்கெல்லாம் உபயோகிக்கப்படும்?

அதிகாரப் பூர்வ அரசு சின்னம்

அதிகாரப் பூர்வ அரசு சின்னம்

CIIIR New Royal Cypher : இங்கிலாந்து நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ்யின் அதிகாரப் பூர்வ அரசு சின்னத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • internation, IndiaEngland England England England

  இங்கிலாந்து மன்னர்  மூன்றாம் சார்லஸ் அதிகாரப் பூர்வ அரசு சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. இனி இங்கிலாந்து அரசு கட்டிடங்கள், அரசு ஆவணங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் அவரின் புதிய சின்னம் இரண்டாம் எலிசபெத் சின்னத்திற்கு மாற்றாக உபயோகிக்கப்படவுள்ளது.

  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்குப் பின்பு அவரின் மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனையடுத்து இரண்டாம் ராணி எலிசபெத்தின் அரச சின்னம் அதிகாரப்பூர்வமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் வடிவத்தைத் திங்கட்கிழமை அன்று பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

  இனி அனைத்து அரச கட்டிடங்கள், அரசு ஆவணங்கள் மற்றும் அஞ்சல் பெட்டிகளில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் புதிய சின்னமே உபயோகிக்கப்படவுள்ளது.

  தங்க நிறத்தில் CIIIR என்று இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அர்த்தம் Charles III Rex. Rex என்றால் லத்தின் மொழியில் மன்னர் என்று அர்த்தம். C என்ற எழுத்து R என்ற எழுத்துடன் இணைந்து R  நடுவில் மூன்று கோடுகள் வரும் படி இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதின் மேல் மன்னரின் கீரிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்காட்டிஷ் பதிவாக ஸ்காட்டிஷ் நாட்டுக் கீரிடம் வைக்கப்பட்டு மற்றொரு சின்னத்தையும் உருவாக்கியுள்ளனர்.

  மறைந்த இரண்டாம் எலிசபெத்திற்கு EIIR அதாவது Elizabeth II Regina என்று சின்னம் இருந்தது. Regina என்பதற்கு லத்தினில் ராணி என்று அர்த்தம். இந்த புதிய சின்னத்தை ஆயுதக் கல்லூரி என்ற அமைப்பு (The College of Arms)வடிவமைத்துள்ளது. 1484ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த கல்லூரின் வேலை அரசு சின்னங்களை வடிவமைப்பது மற்றும் அவற்றின் விவரங்களைச் சேகரித்துப் பராமரிப்பது.

  மூன்றாம் சார்லஸ் மன்னரின் புதிய சின்னத்தை முதலில் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் உபயோகிக்கப்படும். அங்குத் தபாலில் CIIIR என்ற சின்னத்தை அச்சிடுவர். அதன் பின்னர் நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்கள், அரசு ஆவணங்கள், தபால் பெட்டிகளில் மாற்றி அமைக்கப்படும்.

  Also Read : ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய உக்ரைன் வீரரின் பரிதாப நிலை.. புகைப்படம் வெளியிட்டு உக்ரைன் ராணுவம் கண்டனம்!

  அதனைத் தொடர்ந்து, வங்கி பண நோட்டுகள், நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் பாஸ்ப்போர்ட் போன்றவற்றில் மன்னரின் தலை வடிவம் அமைக்கப்படவுள்ளது. பிரிட்டன் நாட்டில் மட்டுமின்றி மூன்றாம் சார்லஸ் மன்னர் தலைமையாக இருக்கும் அனைத்து 14 நாடுகளிலும் மன்னரின் தலை சின்னம் மாற்றி அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Britain, England