ஹோம் /நியூஸ் /உலகம் /

2022ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் பெண் எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ்- க்கு அறிவிப்பு!

2022ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் பெண் எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ்- க்கு அறிவிப்பு!

அன்னி எர்னாக்ஸ்

அன்னி எர்னாக்ஸ்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் பெண் எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் -க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaSweden Sweden

  2022ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் பெண் எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் - க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எல் அகுபேஷன் (L'occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  அன்னி எர்னாக்ஸ் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவர், பாலினம், மொழி, பெண்களின் சமூகம், பெண்கள் தனிமை போன்ற பல கண்ணோட்டங்களில் அவரின் புத்தங்களை எழுதியுள்ளார்.

  பிரான்ஸ் நாட்டில் 1940ம் ஆண்டு நார்மண்டிவில் உள்ள யாவெட்டே என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அன்னி எர்னாக்ஸ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். சமுதாயத்தின் நடுநிலையான வாழ்கையில் வளர்ந்த அவர், எழுத்தில் அதன் பாதிப்புகளைப் பல கோணங்களில் தெரிவித்துள்ளார். அவரின் புத்தகங்கள் மொழி, பாலினம் மற்றும் மக்கள் தரம் பிரிப்பு போன்றவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.

  அவரின் எழுத்துகள் தனித்துவமான பாணியில் இருப்பினும் தன்னை இனவியலாளர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாவல் அடிப்படையில் அவரின் படைப்புகள் வாழ்க்கை அனுபவங்களைக் கற்பனை வடிவில் அளித்துள்ளது.

  அவரின் புத்தகங்கள், அவர் வெளியேறிய சமூக வர்க்கத்தின் உணர்ச்சிகளின் நிழல் பதிந்தே அமைந்திருக்கும்.

  எழுத்து என்பது ஓர் அரசியல், சமூக சமத்துவமின்மை பற்றிய ஒரு விழிப்புணர்வை அது அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் மொழி என்பது கத்திபோல், அது கற்பனையில் இருக்கும் முள் காடுகளை வெட்டி எரிகிறது என்றும் கூறியுள்ளார்.

  Also Read : தாய்லாந்தில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு.. 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்!

  எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ், எழுவது விடுதலையை அளிக்கிறது என்று உறுதியாக நம்பக்கூடியவர். எளிய மொழியில், துரிதமான வடிவில் அவரின் புத்தகங்கள் அமைந்துள்ளது. மேலும் அவரின் தைரியமும், சமுக வர்க்கத்தில் அவர் அடைந்த வேதனை, அவமானம், பொறாமை, தான் யார் என்று உணர முடியாமல் இருப்பது போன்றவற்றைப் பற்றி வெளிப்படையாக எழுத்தின் மூலம் உலகிற்குத் தெரிவித்த அவரின் படைப்புகள் பாராட்டதக்கவை.

  எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் - யின் பாராட்டத்தக்கப் படைப்பிற்காக இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Literature, Nobel prize