ஹோம் /நியூஸ் /உலகம் /

2022ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூவருக்கு அறிவிப்பு!

2022ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூவருக்கு அறிவிப்பு!

நோபல் பரிசு

நோபல் பரிசு

Nobel prize for economics : உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டிற்கு ஒரு முறை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் வழங்கப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • internati, IndiaSweden Sweden Sweden

  இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ். பெர்னான்கே, டக்ளஸ் W டயமண்ட் மற்றும் பிலிப் எச். டிப்விக் (Ben S. Bernanke, Douglas W. Diamond and Philip H. Dybvig) ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்த பரிசு இவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இது வரை பொருளாதாரத்திற்காக 53 நோபல் பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2 பெண்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  2022ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

  பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பெர்ட்டோசி, பேரி ஷார்ப்லெஸ் மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மார்ட்டன் மெல்டல் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் பெண் எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ்- க்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி-க்கும் ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டது.

  இந்த ஆண்டின் கடைசி நோபல் பரிசு அறிவிப்பாகப் பொருளாதார அறிவியல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அறிவிப்புகள் முடிந்த நிலையில் வரும் டிசம்பர் 10ம் தேதி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு பரிசு அறிவிக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.

  மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம்மில் விழா நடத்தப்பட்டு வழங்கப்படும். அதே போல் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் விழா நடத்திப்பட்டு வழங்கப்படவுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Economy, Nobel prize, Noble for economics