ஹோம் /நியூஸ் /உலகம் /

அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிற்கு அறிவிப்பு!

அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிற்கு அறிவிப்பு!

அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஒரு நபர் மற்றும் இரண்டு அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • internatio, IndiaSweden Sweden Sweden Sweden Sweden

  உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டிற்கு ஒரு முறை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு இரண்டு அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு.

  மனிதநேய மதிப்புகள் அறிந்து செயல்படுதல், ராணுவ செயல்பாடுகளைத் தடுத்தல், சட்டத்தின் கொள்கைகள் என்ற காரணங்களினால் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  அந்த வகையில் ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம், ரஷ்யா உக்ரைன் மேல் போர் தொடங்கியதில் இருந்து நடக்கும் போர்க் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து உலக அரங்கில் வெளிப்படுத்தி வருகிறது. அதற்காக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு, மனித உரிமைகளைக் காக்கவும், அதனை வலுப்படுத்தவும் தொடங்கப்பட்டது. மேலும் உக்ரைன் ஜனநாயகம் மேம்படுத்தி வலுப்படுத்த பெரும் பங்கு அளித்துள்ளனர். அதற்காக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதனைத் தொடர்ந்து பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, 1980களில் பெலாரஸ்யில் நடந்த ஜனநாயகம் இயக்கத்தை முன்மொழிந்தவர். அதற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் அமைதிக்கான நோபல் பரிசின் இறுதி பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Also Read : அமெரிக்காவில் புடவை அணிந்த பெண்கள் மீது குறிவைத்து தாக்குதல்..14 பெண்களை தாக்கிய நபர் கைது

  2022ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பெர்ட்டோசி,பேரி ஷார்ப்லெஸ் மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மார்ட்டன் மெல்டல் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் பெண் எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ்- க்கு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வரும் அக்டோபர் 10 தேதி அறிவிக்கப்படவுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Nobel prize, Noble prize for Peace