உணவுப் பிரியர்கள் பலருக்கும் பிடித்தமான சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்த அலி அஹ்மத் அஸ்லாம் தனது 77ஆவது வயதில் காலமானார். ஸ்காட்லாந்தின் கிளஸ்கோ நகரில் உள்ள தனது வீட்டில் இவர் நேற்று முன்தினம் காலமானதாக உறவினர் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பிறந்த அலி அஹ்மத், தனது சிறு வயதிலேயே பிரிட்டன் நாட்டிற்கு வந்தார். கிளாஸ்கோ நகரில் குடிபெயர்ந்த இவர், 1964ஆம் ஆண்டில் ஷிஷ் மஹால் (Shish Mahal restaurant) என்ற உணவகத்தை தொடங்கினார்.
தனது தொழிலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அலி அஹ்மத், தொடர்ச்சியாக புதிய வகை உணவுகளை தயார் செய்து பார்த்தார். அதற்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பை கவனித்து அதன்படி கூடுதலாக மெருகூட்டும் வேலைகளையும் செய்தார். அப்படித்தான் ஒருநாள் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், சிக்கன் டிக்காவை சாப்பிட மிகவும் வறட்சியாக உள்ளது. கொஞ்சம் சாஸ் கொடுங்கள் சேர்த்து சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.
வாடிக்கையாளரின் இந்த டேஸ்டை கவனித்த அலி அஹ்மத், ஏன் சிக்கன் டிக்காவை தயிர், க்ரீம், மசலா சாஸோடு சமைத்து தரக்கூடாது என்று சிந்தித்தார். இவ்வாறு பிறந்தது தான் புதிய டிஷ்ஷான சிக்கன் டிக்கா மசாலா. பொதுவாக மேற்கத்திய மக்கள் மசாலா பொருள்களை சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள்.
இதையும் படிங்க: கல்யாணத்துக்கு போற மாதிரி டிரெஸ் போடுறாங்க.. இதெல்லாம் ஒத்துவராது - பெண்களுக்கான உயர்கல்வி தடை குறித்து தாலிபான் விளக்கம்
அப்படி இருக்க அவர்களுக்கும் பிடிக்கும் விதத்தில் தான் இந்த சிக்கன் டிக்கா மசாலா என்ற டிஷ்ஷை உருவாக்கியுள்ளார் அலி அஹ்மத். இந்த டிஷ் இவரை மிகப்பெரிய பிரபலமாக மாற்றியது. இவருக்கு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளன. அலி அஹ்மத் அனைத்து விஷயத்திலும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர் என அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிளாஸ்கோவில் உள்ள அவரது ஷீஷ் மஹால் உணவகம் 48 மணிநேரம் மூடப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chicken masala, Chicken recipe, Food items, Scotland