அமெரிக்காவை தாக்க தொடங்கியது ஃபுளோரன்ஸ் புயல்!

news18
Updated: September 14, 2018, 11:58 AM IST
அமெரிக்காவை தாக்க தொடங்கியது ஃபுளோரன்ஸ் புயல்!
கோப்புப் படம்
news18
Updated: September 14, 2018, 11:58 AM IST
அமெரிக்காவை ஃபுளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியுள்ளது.  மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஒரு லட்சம் பேர் குடும்பத்தினர் தவித்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  

அமெரிக்காவில் தற்போது மழை காலம் தொடங்கி உள்ளது. அங்கு அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை புயல் தாக்குவது உண்டு. அட்லாண்டிக் கடல் பகுதியில் ஃபுளோரன்ஸ் புயல் உருவானது. இதனால், அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புளோரன்ஸ் புயல், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையைத் தாக்கத் தொடங்கியுள்ளது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மின்விநியோகம் இன்றி தவித்து வருகின்றனர்.

வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் விர்ஜீனியா பகுதிகளில் கடலோரம் வசித்துவரும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது.  இந்த ஃபுளோரன்ஸ் புயல் காரணமாக, கடும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்