உரிமையாளருக்கு சிகிச்சை: ஒரு வாரம் மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாய்

உரிமையாளருக்கு சிகிச்சை: ஒரு வாரம் மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாய்

வாசலில் காத்திருந்த நாய்

பலமுறை அந்த நாயை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். எனினும், அது மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கே ஓடி வந்துள்ளது.

 • Share this:
  துருக்கியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உரிமையாளரின் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்து, தனது அன்பை வெளிப்படுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  துருக்கியின், வடகிழக்கில் அமைந்திருக்கும் டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க். 68 வயதான இவர் போன்கக் என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

  இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி சென்டர்க் உடல்நலக் குறைவால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, அந்த ஆம்புலன்ஸ்க்குப் பின்னாலேயே அந்தநாய் ஓடியுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை வாசலில் தன் எஜமானின் வருகைக்காக காத்திருந்தது.

  சிமல் சென்டர்க் மருத்துவமனையில் 6 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நாய் ஒவ்வொரு நாளும் காலையில் மருத்துவமனைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டு தனது உரிமையாளரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது.

  இந்நிலையில், சென்டர்க்கின் மகள் பலமுறை அந்த நாயை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். எனினும், அது மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கே ஓடி வந்துள்ளது.

  மேலும் படிக்க.... ஒரு நிமிடத்தில் 230 ஜம்ப்... கின்னஸ் சாதனை படைத்த மின்னல் வேக ஸ்கிப்பிங் - வீடியோ

  இது குறித்து, அந்த மருத்துவமனையின் இயக்குனர் புவாட் உகுர் கூறுகையில், “அந்த நாய் யாருக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொருவருக்கும் அந்த நாய் மகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், 6 நாள் சிகிச்சை முடிந்து சிமல் சென்டர்க் மருத்துவமனயில் இருந்து வெளியே வந்தார், அப்போது அவரை கண்ட ஆவலில் தனது வாலை ஆட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது போன்கக்.

  இது குறித்து கருத்து தெரிவித்த சிமல் சென்டர்க் ‘மனிதர்களை போன்று எங்களுடன் இது நெருக்கமாக உள்ளது. உங்களை அது மகிழ்ச்சிப்படுத்தும்’ என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: