• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஒரு விளம்பரத்துக்கு இப்படி ஒரு ரெஸ்பான்ஸா! - மன்னிப்பு கோரிய நிறுவனம்

ஒரு விளம்பரத்துக்கு இப்படி ஒரு ரெஸ்பான்ஸா! - மன்னிப்பு கோரிய நிறுவனம்

We Will Plant a Tree for every pet photo

We Will Plant a Tree for every pet photo

விரைவில் அது மிகவும் பிரபலமாகும் என்பதை உணரவில்லை. அதனால் அந்த பதிவினை அகற்ற முடிவு செய்தோம். இது ஒரு நேர்மையான தவறு

  • Share this:
சமீபத்தில் ஒரு செல்லப்பிராணி படத்திற்கு ஒரு மரம் நடுவோம் என்று இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு போஸ்ட்டுக்கு மில்லியன் கணக்கான ரெஸ்பான்ஸ்கள் குவிந்ததை அடுத்து, தவறுதலாக பதிவினை வெளியிட்டு விட்டோம் என்று நெட்டிசன்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது அந்த அமைப்பு.

இன்ஸ்டாகிராமில் பிளாண்ட் ஏ ட்ரீ கோ (Plant A Tree Co) என்ற பெயரில் செயல்படும் பக்கம் ஒன்று, சமீபத்தில் வெளியான மரம் நடும் பதிவுக்கு நாங்கள் தான் காரணம் என ஒப்புக்கொண்டது. அந்த பதிவு வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் தற்போது ஒரு பெரிய கடிதத்தையே வெளியிட்டுள்ளது. முதலில் அந்த பதிவு 'உன்னுடையதை பகிரு' என்ற ஸ்டிக்கரில் தொடங்கியது. இது விரைவாக பிரபலமடைந்த பிறகு இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் சுற்றி வேகமாக பரவியது.

மேலும் அந்த வைரலான ஸ்டிக்கரில், "ஒவ்வொரு செல்லப்பிராணி படத்திற்கும் 1 மரம் நடுவோம்" என்று உறுதியளித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நாயின் எமோஜியும் இருந்தது. இந்த ஸ்டிக்கர் பிரபலமான சில நொடிகளிலேயே 4 மில்லியனுக்கும் அதிகமானோர், தங்களின் அன்பான செல்லப்பிராணிகளின் படங்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர். இந்த புதுமையான பிரச்சாரத்தில் சாரா ஹைலேண்ட் மற்றும் லில்லி ரெய்ன்ஹார்ட் போன்ற நடிகைகளும் கலந்து கொண்டனர்.

Also read: ஒரிஜினல் ஐபோனை எவ்வாறு அடையாளம் காணலாம் - டிப்ஸ்கள் இங்கே!

வெகுவிரைவில், தங்கள் செல்லப்பிராணிகளின் படங்களை வெளியிட்டவர்கள், “4 மில்லியன் மரங்கள் எங்கே?” என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஆனால் மிக குறுகிய காலங்களில் 4 மில்லியன் மரங்களை நடுவதற்கான உறுதிமொழியை தங்களால் நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்ததால், 10 நிமிடங்களுக்குப் பிறகு அந்த பதிவினை நீக்கியாக அந்த அமைப்பு விளக்கம் அளித்தது.

தற்போது பிளான்ட் ஏ ட்ரீ கோ பேஜ் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, "சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு வேடிக்கையான பிரச்சாரமாக தான் பிளான்ட் ஏ ட்ரீ பிரச்சாரம் தொடங்கப்பட்டது. ஆனால் விரைவில் அது மிகவும் பிரபலமாகும் என்பதை உணரவில்லை. அதனால் அந்த பதிவினை அகற்ற முடிவு செய்தோம். இது ஒரு நேர்மையான தவறு என்றும், விரைவில் விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும்" அந்த நிறுவனம் தெரிவித்தது.

Also read:   மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

ஆனால் அந்த பதிவு நீக்கப்பட்ட பிறகும் கூட அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். ஏனெனில் அந்த தளத்தில் இருந்து ஸ்டிக்கர் முழுமையாக நீக்கப்படவில்லை. இருப்பினும், சமீபத்தில் ஈர்க்கப்பட்ட கவனத்தைப் பயன்படுத்தி, அந்த அமைப்பு ஒரு நிதி திரட்டலை அமைத்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “@treesforthefuture இன்ஸ்டாகிராம் நிதி திரட்டல் அமைப்பு மூலம் நாங்கள் வெறுமனே பணம் திரட்டுகிறோம்.

இது நேரடியாக அவர்களுக்குச் செல்லும், அந்த பணத்தை அவர்கள் மரங்களை நடுவதற்குப் பயன்படுத்தலாம். நாங்கள் எந்த பணத்தையும் தொட மாட்டோம்." என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், இன்ஸ்டாகிராம் நிறுவனம், மரம் நாடும் பிரச்சாரத்தில் இருந்து தெளிவாக விலகி உள்ளது. வைரல் பிரச்சாரத்திற்கு பதிலளித்த தளம், இதுபோன்ற சூழ்நிலைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கான வழியை நாங்கள் மேற்கொள்வார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை வைத்திருக்கும் மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் CTVNews.ca-க்கு அனுப்பிய மின்னஞ்சலில், "'ஒவ்வொரு செல்லப்பிராணி படத்திற்கும் 1 மரம் நடும்', பதிவினை யார் எழுதியது என்பது பற்றிய தவறான புரிதலைக் குறைக்க, தற்போது அந்த ஸ்டிக்கரில் புகைப்படம் சேர்ப்பது முடக்கப்பட்டது. மேலும், இதுபோன்று தவறுதலாக வெளியிடப்படும் பிரச்சாரங்கள் குறித்து விசாரித்து வருவதாக" தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக பிளாட் எ ட்ரீ நிறுவனம், இன்ஸ்டாகிராம் தலைவரான ஆடம் மோசேரிக்கு நேரடியாக ஒரு செய்தியை அனுப்பியது. அதில், எங்கள் தளத்தில் புகைப்படங்களை பதிவிட்ட நபர்களுக்காக தாங்கள் மரம் நடுவீர்களா? என வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: