ஹோம் /நியூஸ் /உலகம் /

கிறிஸ்துமஸ் பண்டிகை: உலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்த தேவாலயங்கள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை: உலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்த தேவாலயங்கள்!

வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட தேவாலயம்..

வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட தேவாலயம்..

உலகில் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கியதையடுத்து வண்ண ஒளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடந்த ஒளி திருவிழா, இரவு நேரத்தை வண்ணமயமாக்கியது. முக்கிய சுற்றுலா மையங்களில் சாலையின் இருபுறமும் வண்ண விளக்குகளால் மரங்கள் ஒளியூட்டப்பட்டன. இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Image

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிலி தலைநகர் சாண்டியாகோ முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் பொழிவு பெற்றுள்ளது. அந்த வகையில், சீன கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரங்களை கருப்பொருளாக கொண்டு கண்கவர் ஒளி திருவிழா நடைபெற்றது.

Image

கீவ்வில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரீவ் தேவாலயத்தை வண்ண ஒளிகளை கொண்டு அலங்கரிக்கும் விதமாக ஒளியூட்டியுள்ளார் ஜெர்ரி ஹாஃப்ஸ்டெட்டர்.

Image

மும்பையில் உள்ள பாந்த்ராவில் மவுண்ட் மேரி தேவாலயம் வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது.

Image

First published:

Tags: Christmas, Christmas eve, Christmas tree