ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவில் கடத்திக் கொலை செய்யப்பட்ட இந்திய குடும்பம் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

அமெரிக்காவில் கடத்திக் கொலை செய்யப்பட்ட இந்திய குடும்பம் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

கடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி

கடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி

கைக்குழந்தை உட்பட நான்கு பேர்கொண்ட இந்தியக் குடும்பத்தைக் கடத்தி கொலை செய்த சம்பவத்தின் கடத்தல் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • int, IndiaCaliforniaCalifornia

  கலிபோர்னியாவில் கைக்குழந்தை உட்பட நான்கு பேர்கொண்ட இந்தியக் குடும்பத்தைக் கடத்தி கொலை செய்த கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது அந்த கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  அமெரிக்காவின் மேற்கு பகுதி மாநிலமான கலிபோர்னியாவில் 8 மாத கைக்குழந்தை உட்பட நான்கு பேர்கொண்ட இந்தியச் சீக்கிய குடும்பத்தைக் கடத்தி கொன்ற கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது.

  கடந்த திங்கட் கிழமை அன்று ஜஸ்தீப் சிங், 27 வயதான அவரது மனைவி ஜஸ்லீன் கவுர், அவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் உறவினர் அமந்தீப் சிங் ஆகியோரை மெர்சிட் கவுண்டி வணிகப் பகுதியில் இருந்து கடத்தப்பட்டுள்ளனர். அந்த குடும்பம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

  குடும்பத்தைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உறவினர்களால் காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு நடத்தினர். அப்போது அந்த குடும்பம் துப்பாக்கி முனையில் மர்ம நபரால் கடத்தப்பட்டது தெரியவந்தது.

  Also Read : காம்பியாவில் 66 குழந்தைகள் பலி.. இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து காரணமா? - WHO விசாரணை

  இந்த நிலையில் கடத்தப்பட்ட நான்கு பேரையும் இறந்த நிலையில் காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். பழத்தோட்டம் அருகில் விவசாயி அளித்த தகவலின் பேரில் குடும்பமாக இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். கடத்திய போது பதிவான திடுக்கிடும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் நான்கு பேரையும் துப்பாக்கி முனையில் கடத்துவது தெளிவாகத் தெரிகிறது.

  ' isDesktop="true" id="814433" youtubeid="v-DRqoBdiC4" category="international">

  இது தொடர்பாக 47 வயதான இயேசு மானுவல் சல்காடோ என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கைக்குழந்தை என்று கூடப்பார்க்காமல் இந்திய வம்சாவளி சீக்கிய குடும்பத்தை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: America, Family, Kidnap, Murder, Punjab