Home /News /international /

தாய்லாந்தில் தஞ்சமடையும் கோத்தபய ராஜபக்ச.. முன்னாள் அதிபருக்கு இலங்கை அரசும் பரிந்துரை

தாய்லாந்தில் தஞ்சமடையும் கோத்தபய ராஜபக்ச.. முன்னாள் அதிபருக்கு இலங்கை அரசும் பரிந்துரை

தாய்லாந்தில் தஞ்சமடையும் கோத்தபய ராஜபக்ச

தாய்லாந்தில் தஞ்சமடையும் கோத்தபய ராஜபக்ச

முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியானது அந்நாட்டில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி அரசை ஆட்டம் காணவைத்தது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச போராட்டக்காரர்களுக்கு எதிராக பயந்து நாட்டை விட்டு தப்பியோடி, தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் தற்போது தாய்லாந்தில் தஞ்சம் அடைவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அதற்கு இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசும் உதவி செய்து வருகிறது.

    இலங்கை கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஆட்சியில் இருந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தினர்.

    போராட்டக்காரர்களுக்கு பயந்து முதலில் மகிந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்தும் அந்நாட்டில் போராட்டம் ஓயாத நிலையில், மக்கள் கோத்தபயவின் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அச்சம் காரணமாக நாட்டை விட்டு தப்பியோடிய கோத்தபய, ஜூலை 13ஆம் தேதி மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய சுமார் ஒரு மாத காலமாக உள்ளார். இந்நிலையில், அங்கிருந்து தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடையும் முயற்சியில் கோத்தபய ஈடுபட்டு வருகிறார். அதற்கு தற்போது ஒப்புதல் கிடைக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இலங்கை விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம்.. சீனா எச்சரிக்கை

    இது தொடர்பாக தாய்லாந்து வெளியுறவுத்துறை கூறுகையில், "கோத்தபய தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைய கோரிக்கை வைத்துள்ளார். முன்னாள் அதிபருக்கு அடைக்கலம் வழங்க இலங்கை அரசும் கோரிக்கை வைத்துள்ளது. தற்காலிமாக தங்குவதற்கான கோரிக்கை தான் தற்போது வைக்கப்பட்டுள்ளது. நீண்ட கால அரசியல் அடைக்கலம் என்ற கோரிக்கை கோத்தபய சார்பில் வைக்கப்படவில்லை" என தாய்லாந்து தரப்பு தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Gotabaya Rajapaksa, Sri Lanka, Sri Lanka political crisis

    அடுத்த செய்தி