தன்பால் ஈர்ப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் தாய்லாந்து

தன்பால் ஈர்ப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு தாய்லாந்து கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது

தன்பால் ஈர்ப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் தாய்லாந்து
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 9, 2020, 9:16 PM IST
  • Share this:
ஆசிய நாடுகளில் முதன்முறையாக தன்பால் ஈர்ப்பு திருமணங்களுக்கு, பிற திருமணங்களைப் போல தாய்லாந்து அரசு அங்கீகாரம் வழங்க உள்ளது. இதற்கான சட்டத்திற்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.

சொத்து உரிமை, குழந்தை வளர்ப்பு என்று வழக்கமான திருமணங்களுக்கு உள்ள அனைத்து அங்கீகாரமும் தன்பால் ஈர்ப்பு திருமணங்களுக்கு வழங்கப்படும். எனினும், புதிய சட்டத்தில் திருமணம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

படிக்க: பொறாமையால் பச்சிளம் இரட்டைக் குழந்தைகளை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்

படிக்க: மருமகனை வரவேற்க 67 வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாமியார் - வைரல் வீடியோ


அதற்குப் பதிலாக, பார்ட்னர்ஷிப் என்ற பதம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, இருவருக்கும் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இருவரில் ஒருவர் தாய்லாந்து குடியுரிமை வைத்திருக்க வேண்டும்.

ஆசிய நாடுகளில் முதன்முறையாக தன் பால் ஈர்ப்பு திருமணங்களுக்கு தாய்லாந்து அங்கீகாரம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading