முகப்பு /செய்தி /உலகம் / வேலைக்காக தாய்லாந்து அழைத்துச்செல்லப்பட்ட 10 தமிழர்கள் ஆவணங்களின்றி மியான்மரில் கைது!

வேலைக்காக தாய்லாந்து அழைத்துச்செல்லப்பட்ட 10 தமிழர்கள் ஆவணங்களின்றி மியான்மரில் கைது!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பாங்காக் செல்ல முயன்ற நிலையில், 10 பேரிடம் போதிய அவணங்கள் இல்லையெனக் கூறி, விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

தமிழகத்தில் இருந்து தாய்லாந்து அழைத்துச்செல்லப்பட்ட 10 தமிழர்கள், உரிய ஆவணம் இல்லாததால் மியான்மரில் சிக்கி தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து தனியார் நிறுவனம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு 27 பேர் தாய்லாந்து அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கிருந்து வேலை தருவதாக கூறி மியான்மர் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சென்ற இடத்தில் உரிய ஆவணம் இல்லை எனக் கூறி 27 பேரையும் அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தத் தகவல் வெளியானதும், வேலைக்கு அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம் அதிகாரிகளிடம் பேசி, 10 பேரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டது. 10 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 17 பேர் மியான்மரிலேயே சிக்கித் தவித்தனர். மீட்கப்பட்ட 10 பேரையும் மியான்மர் தமிழ் சங்கத்தினர், விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து பாங்காக் செல்ல உதவியுள்ளனர்.

துபாய் அருங்காட்சியகத்தில் ஊழியராக அறிமுகமான மனித ரோபோ அமேகா!

பாங்காக் செல்ல முயன்ற நிலையில், 10 பேரிடம் போதிய அவணங்கள் இல்லையெனக் கூறி, விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர்கள், அபராதம் கட்ட கூட தங்களிடம் பணம் இல்லையென்று தெரிவித்துள்ளனர்.

இவர்களை போல சுமார் 300 இந்தியர்கள் வேலைக்காக அழைத்தது செல்லப்பட்டு தாய்லாந்தில் ஆவணங்களின்றி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். இந்த மாதத்தின் தொடக்கத்தில் தான் 45 இந்தியர்களை மீட்டுள்ளனர். இந்த குற்றம் சங்கிலி தொடர்போல நடந்துகொண்டே இருக்கிறது. அரசு அவர்களை மீட்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

First published:

Tags: Myanmar, Thailand, Work