போனை சார்ஜ் செய்துகொண்டே வீடியோ கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : தாய்லாந்து பெண் உயிரிழப்பு !

தாய்லாந்து பெண்

எந்தளவுக்கு மொபைல் போன்கள் பயனளிக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் தருகிறது.

  • Share this:
மொபைல் போன்கள் இப்போது ஒருவர் வாழ்வின் அங்கமாக மாறிவிட்டன. மேலும், அத்தியாவசிய பயன்பாடுகளில் மொபைல் போனும் சேர்ந்துவிட்டது. வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்குவது, கட்டணங்களை செலுத்துவது என பல விஷயங்களை செய்யலாம் என்பதால், ஸ்மார்ட்போன்கள் ஒருவரின் பாதி வேலையை குறைத்து விடுகிறது. அதேசமயம் எந்தளவுக்கு மொபைல் போன்கள் பயனளிக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் தருகிறது.

ஸ்மார்ட்போன்களில் நீண்ட நேரம் பேசுவதும், சார்ஜ் செய்து கொண்டே போன்களை உபயோகிப்பதும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதைப்பற்றி சற்றும் சிந்திக்காமல் எடுக்கும் நடவடிக்கைகளால் பலர் விபரீதங்களை சந்திக்கின்றனர். அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் தனது புதிய தொலைபேசியில் சார்ஜ் போட்டுக்கொண்டே கேம் விளையாடி வந்ததால் மின்சாரம் தாக்கி பலியானார்.

இந்த சோகமான சம்பவம் கடந்த மே 6ம் தேதி இரவு நடந்துள்ளது. அந்தப் பெண் வடகிழக்கு தாய்லாந்தின் உடோன் தானி மாகாணத்தில் வசிக்கும் யூயென் சயன்ப்ராசெர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தனது கணவர் பிரைவன் சாயன்பிரசெர்ட்டிடமிருந்து பிறந்தநாள் பரிசாக அந்த ஸ்மார்ட்போனை அவர் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ALSO READ : இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: கணவருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த கேரளப் பெண் உயிரிழப்பு!

இது தொடர்பாக டெய்லி மெயிலில் வெளியான செய்தி அறிக்கையின்படி, மின்சாரம் தாக்கியதில் கை உட்பட சில பகுதிகள் எரிந்து தீக்காயங்களுடன் தனது மனைவி படுக்கையில் இறந்து கிடந்ததை பார்த்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் மாலை வேளையிலேயே நிகழ்ந்துள்ளதாக பெண்ணின் கணவர் விவரித்துள்ளார்.

ஏனெனில் மாலை வேளையில் பெரும்பாலான நேரத்தை அவரது மனைவி மொபைல் போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பாராம். ஆனால் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டே விளையாடியதால் இதுபோன்ற மோசமான விளைவுகள் நடக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோ ஆதாரத்தின்படி, தொலைபேசி ஜார்ஜிங்கில் இருந்தபோது பெண்ணின் சடலம் படுக்கையில் இருந்தது. மேலும் சார்ஜிங் கேபிள் அவரது கையில் இருப்பதைக் அந்த வீடியோவில் காணலாம்.

சார்ஜர் அவர்களின் வீட்டின் பிரதான சுவிட்சில் செருகப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்த போது யூயெனின் கணவர் வீட்டிற்கு வெளியே அமைந்திருந்த தங்களது மீன் குளத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இரவு வந்து பார்த்தபோது கைகளில் தீக்காயங்களுடன் அவர் மனைவி சுயநினைவின்றி இருந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ : அம்மாடியோவ்..! இதுதான் 16 பெற்று பெருவாழ்வு வாழ்வதோ...

அதிர்ச்சியடைந்த கணவர் மருத்துவ உதவியை நாடியுள்ளார். சோதித்து பார்த்ததில் யூயென் உயிரிழந்து 4 மணி நேரத்திற்கும் மேலாகியது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பெண்ணின் கணவர் பிரைவன் கூறியதாவது, "நான் வீடு திருப்பிய பிறகு, என் மனைவியை எழுப்ப முயற்சித்தபோது அவள் கொஞ்சம் கூட அசையவில்லை. ஏதோ தவறு நடந்திருப்பதை நான் உணர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.

இந்த தம்பதியருக்கு குழந்தைகள் என யாரும் இல்லை. தனது மனைவியின் உயிரிழப்பால் பெரும் சோகத்தில் இருந்த கணவர், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மனைவிக்கு அந்த செல்போனை வாங்கித்தந்தாக கூறியுள்ளார். மேலும் தனது மனைவி தொலைபேசியில் வீடியோ கேம்களை விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஆனால் அதுவே ஆபத்தில் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ALSO READ : செல்ல நாய்க்குட்டிக்கு பிரியாவிடை... வருத்தத்தில் ஒபாமா

மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டதாக நம்பப்படும் பெண்ணின் வலது கையில் காயங்கள் இருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்து போலீஸ் அதிகாரி லெப்டினன்ட் கேணல் மங்க்கோம் சோம்கோட் கூறுகையில், அவரது மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும், இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published: