திணறும் நகரம்: குரங்குகளால் முடங்கியுள்ள தாய்லாந்து மக்கள்...

தாய்லாந்தில் குரங்குகளுக்கு விருந்து வைத்து குரங்குத் திருவிழா கொண்டாடிய நகரம், தற்போது குரங்குகளின் அட்டகாசத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

திணறும் நகரம்: குரங்குகளால் முடங்கியுள்ள தாய்லாந்து மக்கள்...
கோப்புப் படம்
  • Share this:
தாய்லாந்தில் குரங்குகளுக்கு விருந்து வைத்து குரங்குத் திருவிழா கொண்டாடிய நகரம் தற்போது குரங்குகளின் அட்டகாசத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

தாய்லாந்தின் லோப்புரி நகரில் குரங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டு தோறும் குரங்கு படையல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

குரங்குகளால் தான் தாங்கள் வளமுடன் இருப்பதாக கருதி படையலிட்ட மக்கள், தற்போது படையெடுத்து வரும் குரங்குகளை சமாளிக்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.சுற்றுலா நகரமான லோப்புரியில் எப்போதும் நிறைந்திருக்கும் சுற்றுலா பயணிகளால் குரங்குகளுக்கு உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

Also read... மாஸ்கோவில் கோலாகலமாக நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டம்ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாத்துறை முடங்கியுள்ள நிலையில் போதிய உணவின்றி தவிக்கும் குரங்குகள் கடைகளுக்குள் நுழைந்து கையில் கிடைத்த பொருட்களை துவம்சம் செய்கின்றன.

குரங்குகளால் மக்கள் படும் பாட்டைக் கண்ட அரசாங்கம் குரங்குகளுக்கு கருத்தடை செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading