தாய்லாந்தில் ராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 21 பேர் உயிரிழப்பு...!

Thailand Shooting |

தாய்லாந்தில் ராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 21 பேர் உயிரிழப்பு...!
Reuters
  • News18
  • Last Updated: February 9, 2020, 8:28 AM IST
  • Share this:
தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தாய்லாந்தின் நகோன் ரட்சசிமா Nakhon Ratchasima மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் பணியாற்றிய மேஜர் ஜக்ரபந்த் தொம்மா Jakrapanth Thomma என்பவர், தனது உயரதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார். அவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் சிலரும் காயமடைந்தனர்.

பின்பு, அங்கிருந்து ராணுவ வாகனம் மற்றும் ஆயுதங்களை திருடிக் கொண்டு கோரட் நகரத்திற்கு ஜக்ரபந்த் தொம்மா சென்றுள்ளார். அங்கு டெர்மினல் 21 என்ற வணிக வளாகம் ஒன்றிற்குள் புகுந்த அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.


வணிக வளாகத்தில் ஏராளமானோரை அவர் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.

உடனடியாக ஜக்ரபந்த் தொம்மாவை தேடப்படும் நபராக அறிவித்த தாய்லாந்து அரசு, அவரை தீவிர போராட்டத்திற்குப் பின்னர் சுட்டுக்கொன்றது.

ராணுவ வீரரின் துப்பாக்கிச் சூட்டில் 21-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தாக்குதலுக்கு முன்பு, ஜக்ரபந்த் தொம்மா அதனை ஃபேஸ்புக்கில் அறிவித்ததும் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading