ராணுவ ஆட்சியை முடித்துவைத்த தாய்லாந்து பிரதமர்- 5 ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த ஜனநாயகம்!

புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று தாய்லாந்தில் நடைபெறுகிறது.

Web Desk | news18
Updated: July 16, 2019, 6:00 PM IST
ராணுவ ஆட்சியை முடித்துவைத்த தாய்லாந்து பிரதமர்- 5 ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த ஜனநாயகம்!
பிரயுத் சான் - ஓச்சா. (Reuters)
Web Desk | news18
Updated: July 16, 2019, 6:00 PM IST
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா தனது பதவியை ராஜினாமா செய்து ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக ஆட்சிக்கு வழிவிட்டுள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து தனது ராணுவ அதிகாரத்தால் தாய்லாந்தின் பிரதமர் ஆனார் பிரயுத் சான். இதனால் அரசியல் கட்சிகள் வீழ்ந்து ராணுவ ஆதரவாளர்களே நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றனர்.

ஒரு தொலைகாட்சிக்கு பேட்டியளித்த பிரயுத் சான், “ராணுவ ஆட்சி நாட்டின் பல பகுதிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான மீன்பிடி முறை, மனித கடத்தல் ஆகியவை ஒழிக்கப்பட்டன. கடந்த ஆண்டு குகைக்குள் சிக்கிய 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களை மீட்டதே ராணுவ ஆட்சிதான்” என்றார்.

2014-ம் ஆண்டு ராணுவ ஆட்சியை அமைத்த பின்னர் சில எதிர்ப்புகளையும் இந்த ராணுவ ஆட்சி சந்தித்தது. ஆறு மாத கால போராட்டத்துக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் தாய்லாந்தில் தேர்தல் நடைபெற்று தற்போது ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. இதனால் சிவில் வழக்குகள் அனைத்தும் ராணுவத்திடமிருந்து நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக ஆட்சி எப்படி அமையும் என தாய்லாந்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று தாய்லாந்தில் நடைபெறுகிறது.

மேலும் பார்க்க: ட்விட்டர் பயனாளர்களில் ஐந்தில் ஒருவர் ட்ரம்ப் ஃபாலோயர்..! - ஆய்வில் தகவல்
First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...