Home /News /international /

ஓவர் கஞ்சா... தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட இளைஞர்

ஓவர் கஞ்சா... தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட இளைஞர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

மீண்டும் கஞ்சாவை புகைத்தபோது, அவருக்கு பாலியல் எண்ணம் இல்லாமலேயே ஆணுறுப்பில் விரைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வலியும் ஏற்பட்டுள்ளது. வலியை போக்க எண்ணி, ஆண்குறியின் தோலை பலமுறை கத்தரிக்க முடிவு செய்து, கத்தரிக்கோலால் தானே தனது ஆணுறுப்பை முழுவதுமாக துண்டித்துக் கொண்டார்

மேலும் படிக்கவும் ...
    தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கஞ்சா பழக்கம் ஏற்பட்ட மனநல பாதிப்பில் தனது ஆண் உறுப்பை கத்திரியால் துண்டித்துகொண்டார். இந்த சம்பவம் மிகவும் அரிதானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கஞ்சா புகைப்பது தொடர்பாக பல காலமாக நீண்ட விவாதங்கள் இருந்து வருகின்றன. ஒருதரப்பினர். இது புத்துணர்ச்சி அளிப்பதாகவும், மருத்துவ குணம் பொருந்தியது என்றும் கற்பனை திறனை அதிகரிப்பதாகவும் கூறும்வேளையில், உடலுக்கு தீங்கானது, உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும், தனிநபர் மட்டுமல்லாது சமூகத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது மற்றொரு தரப்பினரின் வாதமாக உள்ளது. இதனை நிரூப்பிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தாய்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

    இது தொடர்பாக, சியாங் மாய் பல்கலைக்கழகத்தின் அவசர மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள்ஜார்னல் ஓப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் எழுதியிருப்பதாவது,  கடந்த 20 ஆண்டுகளில் மனநல பாதிப்பு காரணமாக ஆண்கள் தங்களது பிறப்புறுப்பை சிதைத்துகொள்வது தொடர்பாக 100 சம்பவங்கள் வரை நடைபெறுள்ளன. எனினும், கஞ்சா போதையால் ஏற்பட்ட மனநல பாதிப்பால் ஆணுறுப்பை சிதைத்துகொள்வது என்பது மிகவும் அரிதானது.

    தாய்லாந்தை சேர்ந்த இளைஞருக்கு இதற்கு முன்பாக தன்னை தானே சிதைத்துகொள்ளும் மனநல பாதிப்பு எதுவும் கிடையாது.  2 ஆண்டுகளுக்கு கஞ்சா - புகைப்பழத்திற்கு அடிமையாகி இருந்த அவர், குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றபோது மூன்று மாதங்களாக கஞ்சா புகைக்கும் பழக்கத்தை நிறுத்தியிருந்தார்.

    இதையும் படிங்க: அமெரிக்க படைகள் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் உயிரிழப்பு... அதிபர் ஜோ பைடன் தகவல்


    இந்நிலையில், மீண்டும் கஞ்சாவை புகைத்தபோது, அவருக்கு பாலியல் எண்ணம் இல்லாமலேயே ஆணுறுப்பில் விரைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வலியும் ஏற்பட்டுள்ளது. வலியை போக்க எண்ணி, ஆண்குறியின் தோலை பலமுறை கத்தரிக்க முடிவு செய்து, கத்தரிக்கோலால் தானே தனது ஆணுறுப்பை முழுவதுமாக துண்டித்துக் கொண்டார்.

    இரண்டு மணிநேரம் சென்ற நிலையில்,  ரத்தம் நிற்காமல் வந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். ஆண்குறியில் ரத்தம் வந்துகொண்டிருந்ததோடு, விதைப்பையிலும் காயம் ஏற்பட்டிருந்தது. 2 செ.மீ. மட்டுமே ஆண்குறி சதை மீதம் இருந்தது.  இதையடுத்து அவர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

    மேலும் படிங்க: ராணுவ வீரரையா ஒலிம்பிக் ஜோதியை ஏந்தச் செய்வது?- இந்திய கண்டனத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவு


    நிழல்கள் அசைவது, பறவைகள், பூச்சிகளின் சத்தம், மனசோர்வடைந்த மந்த நிலை போன்ற காட்சி மற்றும் செவிவழி மாயத்தோற்றங்களை கண்டதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். ஆனால், அவரிடம் எந்த தற்கொலை எண்ணமும் தோன்றவில்லை. சிகிச்சைக்கு பின்னர் 2 வாரங்கள் கழித்து உட்கார்ந்த நிலையில், சிறுநீர் கழிக்கும் அளவுக்கு அவரது உடல்நிலை முன்னேறியுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cannabis, Crime News, Ganja, Marijuana, Psycho

    அடுத்த செய்தி