முகப்பு /செய்தி /உலகம் / போதைப்பொருள் கடத்தல்.. சர்ஜரி செய்து முகத்தையே மாற்றிய கிரிமினல்.. நூல்பிடித்து தட்டித்தூக்கிய போலீஸ்!

போதைப்பொருள் கடத்தல்.. சர்ஜரி செய்து முகத்தையே மாற்றிய கிரிமினல்.. நூல்பிடித்து தட்டித்தூக்கிய போலீஸ்!

சஹாரத் சவாங்ஜாங்

சஹாரத் சவாங்ஜாங்

தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளம் போதைப்பொருள் விற்பனை செய்யும் ஆசாமியை போலீஸ் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaBangkok Bangkok Bangkok

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 25 வயதான போதைப்பொருள் விற்பனை செய்யும் இளைஞர் போலீஸிடம் இருந்து தப்பிக்க கொரியன் போல் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். அவரை பல மாதங்களாகத் தேடி வந்த நிலையில் பாங்காக் போலீஸ் தற்போது கைது செய்துள்ளனர்.

சஹாரத் சவாங்ஜாங் என்ற 25 வயதான இளைஞர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் போதை மருந்து விற்பனை செய்வதில் பெரிய தலையாக இருந்து வந்துள்ளார். இவரைப் போதைப்பொருள் தடுப்பு போலீஸார் மூன்று மாதங்களாகத் தேடிவந்துள்ளனர். போலீஸார்கள் இவரை தேடுவதை அறிந்த சஹாரத் தலைமறைவாக இருப்பதற்கு புதிய யுத்தியை கையாண்டு உள்ளார். அதாவது தென் கொரியாவைச் சேர்ந்தவர் போல் முக அறுவை சிகிச்சை செய்துகொண்டு தென் கொரியாவில் புதிய வாழ்க்கை தொடங்க திட்டம் தீட்டியுள்ளார்.

அவரின் புகைப்படங்களுடன் தேடிய நிலையில் அவரின் புதிய முகம் தெரியாமல் போலீஸார் பெரும் அவதியடைந்துள்ளனர். பழைய முகத்திற்கும் புதிய முகத்திற்குக் கொஞ்சம் கூட ஒத்துப்போகவில்லை. புதிய முக அமைப்பில் அழகான ஆணாகக் காட்சியளித்துள்ளார். மேலும் அவர் பெயரையும் சியோங் ஜிமின் என்று மாற்றியுள்ளார்.

Also Read : மழைபோல பெய்யும் பனி.. காலநிலை மாற்றத்தால் கதிகலங்கும் அமெரிக்கா.. ஷாக் போட்டோஸ்!

பாங்காக்கில் இயங்கி வரும் இதர போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூலம் ஒருவழியாக போலீஸ் அவரை கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களை நெதர்லாந்தில் இருந்து பெற்று விற்பனை செய்ததாகக் கூறியுள்ளார். டார்க் வெப் மூலம் கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பு மூன்று முறை போலீஸார் இவரைப் போதைப்பொருள் வழக்கில் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடன் தொடர்புடைய நபர்களைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக பாங்காக் போலீஸ் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Thailand