திருட சென்ற வீட்டில் ஏசியை போட்டு குட்டி தூக்கம் போட்ட திருடன்- காலையில் வந்து எழுப்பிய போலீஸ்

திருடிய வீட்டில் உறங்கிய இளைஞர் கைது

ஒரு குட்டி தூக்கம் போட முடிவெடுத்து ஏ.சியை ஆன் செய்து அறையில் இருந்த மெத்தையில் சொகுசாக படுத்து உறங்கியுள்ளார்.

 • Share this:
  தாய்லாந்தில் நாட்டில் திருட போன இடத்தில் ஏ.சியை ஆன் செய்து தூங்கிய இளைஞர் உரிமையாளரிடம் வசமாக மாட்டியுள்ளார்.

  தாய்லாந்தை சேர்ந்த அந்த 22 வயது இளைஞர் அதித் கின் குந்துத் (Athit Kin Khunthud) திருட்டு தான் தொழிலாம். நள்ளிரவு 2 மணிக்கு ஒரு வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த பொருள்களை கொள்ளையடித்துள்ளார். பரபரப்பாக கொள்ளையடித்ததில் அந்த இளைஞருக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த ஏ.சி ரிமோட் கையில் தென்பட அதனை எடுத்து ஆன் செய்துள்ளார். என்ன நினைத்தாரோ என்னவோ சரி ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வீட்டு உரிமையாளர் எழுவதற்குள் சென்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார். அந்த அறையில் இருந்த மெத்தையில் சொகுசாக படுத்து உறங்கியுள்ளார்.

  காலை பொழுது விடிந்துவிட்டது. இளைஞருக்கு முன்னால் வீட்டின் உரிமையாளர் எழுந்துவிட்டார். அவரது மகளின் அறையில்தான் திருடன் உறங்கிக்கொண்டிருக்கிறார். மகள் வெளியில் சென்றுவிட்டாள் ஏ.சி ஓடிக்கொண்டிருக்கிறது என ஏதேச்சையாக உள்ளே சென்று பார்த்துள்ளார். முன்பின் தெரியாத நபர் ஒருவர் படுக்கையில் நன்கு உறங்குவதை பார்த்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர் போலீஸ் அதிகாரியாம். அவர் கேஷூவலாக காவல்நிலையத்துக்கு போன் செய்து காவலர்களை வரவழைத்துள்ளார்.

  திருடன் உறங்குவதை வீடியோ எடுத்துள்ளார். போலீஸ்காரர்கள் எல்லாம் வந்ததும் ஏதோ சத்தம் கேட்கிறதே என கண் விழித்துள்ளான் அந்த திருடன். காவலர்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டார். அந்த திருடன் குழப்பத்துடன் பார்க்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Published by:Ramprasath H
  First published: