டிரம்புக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு சிக்கல்: வழக்கை எதிர்கொள்ள நிதி திரட்ட திண்டாட்டம் - பொது மன்னிப்பு கேட்டதை கண்டுகொள்ளாத டிரம்ப்!

டிரம்புக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு சிக்கல்: வழக்கை எதிர்கொள்ள நிதி திரட்ட திண்டாட்டம் -  பொது மன்னிப்பு கேட்டதை கண்டுகொள்ளாத டிரம்ப்!

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளதால், அதற்கு நிதி தேவைப்படுவதாக தெரிவித்துள்ள ஜெனிபர், ஆதரவாளர்கள் தங்களால் இயன்ற அளவிலான நிதியை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Share this:
டிரம்புக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், வழக்குகளை எதிர்கொள்ள ஆகும் செலவுக்காக ஆன்லைன் மூலம் நிதி திரட்டி வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் தோல்வியை ஏற்க மறுத்து அவரது ஆதரவாளர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டு நாடாளுமன்ற கட்டடமான அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். ஜெனிபர் என்ற பெண் டெக்ஸாஸில் இருந்து தனி ஜெட் விமானம் மூலம் வாஷிங்டன் வந்து கேப்பிட்டல் கட்டட முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றார். அவரை கைது செய்த காவல்துறையினர், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அனுமதியின்றி செல்லுதல், தடை செய்யப்பட்ட கட்டடத்திற்குள் சட்டவிரோதமாக நுழைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

தனது தவறுக்காக டிரம்ப் அதிபர் பதவியில் இருக்கும்போதே ஜெனிபர் பொது மன்னிப்பு கேட்டார். ஆனால், டிரம்ப் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை பதிவு செய்துள்ள அவர், கேப்பிட்டல் கட்டட போராட்டத்தில் பங்கேற்றதற்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளதால், அதற்கு நிதி தேவைப்படுவதாக தெரிவித்துள்ள ஜெனிபர், ஆதரவாளர்கள் தங்களால் இயன்ற அளவிலான நிதியை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது சமூகவலைதள பக்கத்தில் Paypal கணக்கு லிங்கையும் இணைத்துள்ளார். மேலும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள ஜெனிபர், தனது அடுத்தடுத்த ட்வீட்டுகளில் பலரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். தன்னை காவல்துறை தவறாக கைது செய்திருப்பதாகவும், சுதந்திரக்காற்றை சுவாசிக்க அனைவரும் போராட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கேப்பிட்டல் ஹில் வன்முறை


வெறுப்பை விதைப்பவர்கள் தன்னை சுற்றி அதிகம் இருப்பதாகவும் ஜெனிபர் குற்றம்சாட்டினார். தன்னை நிறவெறியர் என அழைப்பவர்கள் அனைவரையும் 10 முதல் 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஜெனிபர், தேசப்பற்றுள்ளவர்கள் மட்டும் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.



தன்மீது அவதூறு பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் அனைவரும் தன்னுடைய தொழிலை அழிக்க நினைப்பதாக கூறியுள்ளார். ஜெனிபரின் கோரிக்கைக்கு சிலர் ஆதரவு தெரிவித்து நிதியளித்தாலும், பலரும் நிராகரித்துள்ளனர். 1000 டாலர் வரை நிதி திரட்டிய அவரது கணக்கை, விதிமுறைகளை மீறியதாக Paypal நிறுவனமும் முடக்கியுள்ளது. ரியல் எஸ்டேட் புரோக்கரான அவரின் லைசென்ஸையும் முடக்க வேண்டும் என டெக்சாஸ் ரியல் எஸ்டேட் முகமைக்கு பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: