முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 10,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaTexasTexas

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது அமெரிக்கா பெண் இனவெறி தாக்குதல் நடத்திய அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் 4 பேர் தங்களின் வாகனத்தை நிறுத்தி அங்கு நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் இந்திய பெண்கள் மீது ஆத்திரத்துடன் திட்டி வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். இந்திய பெண்களைப் பார்த்து அந்த வெள்ளைக்காரப் பெண், நீங்கள் இந்தியாவுக்கே திரும்பி போங்கள். எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் தான் இங்கு இருக்கிறீர்கள்.

இந்தியாவில் நன்றாக வாழ முடியும் என்ற போது இங்கே ஏன் வருகிறீர்கள். நான் இந்தியர்களை வெறுக்கிறேன் என்று கூச்சலிட்டு திட்டியுள்ளார். மேலும், ஒரு இந்திய பெண்ணை வெள்ளைக்கார பெண் தாக்கவும் செய்துள்ளார். இதை ஒரு பெண் வீடியோ எடுத்துள்ளார். மற்றொரு பெண் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து வெள்ளைக்கார பெண் என்னை தாக்குகிறார் எனத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட அந்த பெண், நான் மெக்சிகன். ஆனால் அமெரிக்காவில் பிறந்தவள் என்றுள்ளார். அத்தோடு நிற்காமல் தன்னை வீடியோ எடுப்பதை நிறுத்த வேண்டும் அல்லது துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டவும் செய்துள்ளார்.

இதையும் படிங்க: இருவேறு தம்பதியினருக்கு ஒரேமாதிரி பிறந்த குழந்தைகள்.. எப்படி சாத்தியம்?

இந்த பரப்பான நிகழ்வுக்கு மத்தியில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்தி மிரட்டிய பெண்ணை கைது செய்தனர். காவல் துறை விசாரணையில், அவரது பெயர் எஸ்மெரால்டா என்பது தெரியவந்தது. அந்த பெண் மீது பல்வேறு பிரிவுகளின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், 10,000 டாலர் (இந்திய மதிப்பு படி சுமார் ரூ.8 லட்சம்) அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பாதிப்புக்கு ஆளான பெண்களில் ஒருவரான ராணி பானர்ஜி என்பவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

First published:

Tags: American Lady, Attack on Women, Racism, USA